பக்கம்:பாலைப்புறா.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 பாலைப்புறா

ஆப்பிரிக்காவுலே தாத்தா-பாட்டி, பேரன் பேத்தி இந்த இரண்டு வகைதான் இப்போ இருக்குது... இந்த இரண்டுக்கும் பாலமான அப்பா- அம்மாக்களை எய்ட்ஸ் விழுங்கிட்டு. அதனால... எவ்வளவு காலம் வாழ்ந்தோம் என்கிறது முக்கியமில்லை... உலகம் முழுசும் சீரழிஞ்சு வரும் இந்த சமுதாயத்தில் எத்தனை பேருக்கு பயன்பட்டோம் என்கிறதுதான் முக்கியம்’

இதற்குள், அசோகனுக்கு டெலிபோன் வந்திருப்பதாய், பச்சை சேலை கட்டிய ஒரு மூதாட்டி, உள்ளே வந்து சொல்லிவிட்டுப் போய்விட்டாள். அப்படியும் அசோகன், அவளுக்கு ஒரு நிமிடம் கண் கலங்க ஆறுதல் சொல்லிவிட்டுப் போனான்.

அசோகன் அங்கே நின்றது வரைக்கும் பாதுகாப்பு உணர்வோடு நிமிர்ந்த கலைவாணியின் மனம், இப்போது அவள் உடலைப் போலவே படுத்தது. தனிமைத் துயர்... தனித்துப் போன துயர். எதிர் பாராமல் பெற்றோர் உற்றாரிடம் இருந்து அற்றுப் போன துயர். அம்மாவிடம் இருந்து பிரிக்கப்பட்ட குழந்தை பயம். குழந்தையாவது காலப் போக்கில் அம்மாவை மறந்து போகும். ஆனால் குழந்தைப் பருவத்தில் இருந்து குழந்தை சுமக்கும் பருவம் வந்தவர்களால் மறக்க முடியுமா...? சுமக்கிறவ ளால், சுமந்தவளை நினைக்காமல் இருக்க முடியுமா?

என்றாலும், கலைவாணி அசோகன் சொன்னதை அசை போட்டுப் பார்த்தாள். கவலை மூடியைக் கிழித்துப் போட்டு மனப் பாண்டத்தை குயவர்போல், வளைத்துப் பிடித்தாள். பார்த்தவைகளையும், படித்தவை களையும் தனக்கு உறுதுணையாக்கிக் கொண்டாள்.

குற்றாலத்தில் உள்ள ஆதிபராசக்தி கல்லூரியில் இறுதியாண்டு படித்தபோது, கல்லூரி முதல்வரின் வற்புறுத்தலில், அவள் கல்லூரித் தோழிகளோடு தென்காசிக்கு அருகே உள்ள ஆயக்குடிக்குப் போனாள். ஆறு பாயும் கிராமம். முப்போக வயல்கள், சோலைகளான தோட்டங்கள். இதற்கு சிறிது தள்ளி, ஒரு காம்பவுண்டுக்கு உள்ளேசின்னச்சின்னக் கட்டிடங்கள்... ஒரு பெரிய கூடத்தில் ஊனமுற்ற குழந்தைகள்... கண் கெட்டவை... காது அற்றவை...கால்கள் கூம்பியவை. கை குவித்துப்பாடுகின்றன. இந்த ஊனக் குழந்தைகளுக்கு முன்னால் ஒரு ஞான சொரூபம். கடமையை வழிபாடாகக் கொண்ட ஒரு உருவம்... சாய்வு நாற்காலியில் சாய்ந்து கிடக்கிறது. இடுப்புக்குக் கீழே கால்கள் செத்துத் தொங்கின. கைகளும் அப்படியே... இருபத்திரண்டு வயது தோற்றமிக்க உடம்பில் முப்பது வயது முகம்... முகத்தில் இருந்து வயிறு வரை மட்டுமே இயங்குகிறது. அவ்வப்போது பணியாட்களோ தொண்டர்களோ... அவரைத் தூக்கி, லேசாய், மேலும் கீழுமாய் ஆட்டுகிறார்கள். அப்போதுதான் இதயம் இயங்குமாம். அதன் துடிப்பே இந்த ஆட்டத்தில் அடங்கி இருக்கிறது. இவளும், இவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/208&oldid=635650" இலிருந்து மீள்விக்கப்பட்டது