பக்கம்:பாலைப்புறா.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 பாலைப்புறா

ஆத்மார்த்தம்...அத்தனையும் குற்றால அருவி... உள்ளத்தைக் கழுவி விடும் இசைமழை... பயமுறுத்தாமல், மேகத்தைப் பார்க்க வைக்கும் மின்னொளி... கூட்டம் ஒட்டு மொத்த மனித உருவமாகிறது. அதே கூட்டம் ஒரு மனிதர் போல் கைத்தட்டியும், உருகிப் போயும் கிடந்தது.

அவ்வளவு ஏன்... சென்னைத் தொலைக்காட்சியில் செய்தி படிக்கும் இன்னொரு ராமகிருஷ்ணனின் இரண்டு கால்களும் நாணலானது. ஆளுதவி இல்லாமல்; நடக்க முடியாதவராம். ஆனால் ஆங்கில பேச்சுப் போட்டியிலும், தமிழ் பேச்சுப் போட்டியிலும் நம்பர் ஒன்னாம். பேப்பர்ல படத்தோட போட்டிருந்தாங்க. அட்டகாசமான சிரிப்பு... எனக்கு எந்தக் கோளாறும் இல்லை என்பது மாதிரியான தோரணை.

இதேபோல், உலகளாவிய அளவில் ஒரு ஹெலன் ஹெல்லர், 1968 வரை நம்மோடு வாழ்ந்த அமெரிக்க மாது... காதிழந்து, கண்ணிழந்து போனாலும் மனமிழக்காத வீராங்கனை விதியை மதியால் வென்றவள் ஊனமுற்றோரின் உறுதுணைவி.

கலைவாணி, தனக்குத்தானே வெட்கப்பட்டுக் கொண்டாள். உள்ளத்தில் ஊனமில்லாத அந்தச்சாதனையாளர்களை நினைக்க நினைக்க, தானும் ஒரு சாதனை செய்ய வேண்டும் என்று மனதில் ஒரு வைராக்கியம்...

இதற்குள், சந்திராவும் அசோகனும், உள்ளே வந்தார்கள். அவர்களைப் பார்த்து, கலைவாணி கையாட்டிச் சிரிப்பதைப் பார்த்து, அவர்கள் அசந்து போனார்கள். ஒரு வேளை, அவளுக்கு ஹிஸ்டிரியா மீண்டும் வந்து விட்டதோ என்று கூடப் பயந்து போனார்கள். அதற்குள் கலைவாணி, தெளிவாகவே கேட்டாள்.

‘நம்ம ரத்தத்தில... ஹெச்.ஐ.வி. கிருமிகள் இருக்கிறதை எப்படிக் கண்டுபிடிக்கீங்க? எலிசா என்கிறீங்க... வெஸ்டர்ன் பிளாட் என்கிறீங்க... யாருக்குப் புரியுது... கொஞ்சம் விளக்கமாய் சொல்றீங்களா?”

‘புரிஞ்சுதான் என்ன ஆகப் போகுது.. ஆனாலும்புரிய வைக்கேன். பொதுவாய் எய்ட்ஸ் கிருமிகளை, ரத்தத்தில் இருந்து தனிப்படுத்திப் பார்க்க முடியாது... ஆனால் அந்த கிருமிகளை எதிர்த்து, நம் உடம்பு உற்பத்தி செய்கிற எதிரனுக்களை கண்டுபிடிக்க... ஒரு கருவி இருக்குது. இதுல நூறு துளைகள் பல்லாங்குழிகள் மாதிரி. இவற்றில், ஹெச்.ஐ.வி.யோடு ஒட்டிக் கொள்கிற ஆன்டிஜென் என்கிற ஒருவித திரவத்தை தடவுறோம். இந்த ஆன்டிஜென் முஸ்தபா மாதிரின்னு வச்சுக்கோ... ஒருவருடைய ரத்தத்தை பாட்டிலில் வைக்கோமா... அதில் மேலே நிற்கிற சீரத்தை - அதாவது ரத்த நீரில் ஒரு துளியைத் துளையில கொட்டுறோம்... அப்புறம் சம்பந்தப்பட்ட ஒரு திரவ என்ஸைமை ஊத்துறோம். ஹெச்.ஐ.வி. கிருமி உள்ளரத்தத் திரவம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/210&oldid=635653" இலிருந்து மீள்விக்கப்பட்டது