பக்கம்:பாலைப்புறா.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 211

கலர் மாறும். மஞ்சளாகவோ ஊதாவாகவோ நிறம் மாறும்... நிறத்தை டை மூலம் நாமே நிச்சயித்துக் கொள்ளலாம்’

டாக்டர் அசோகன் மூச்சு விட்டபோது, டாக்டர் சந்திரா மூச்சைப் பிடித்துப் பேசப் போனாள்.

‘வெஸ்டர்ன் பிளாட் என்பது...”

கலைவாணி, கையெடுத்துக் கும்பிட்டாள்... ‘அய்யோ இதுக்கு மேல அறுக்காதீங்க என்றாள் சிரிப்பாகவும் சிணுங்கலாகவும். அசோகன் ஜோக்’ அடித்தான்.

‘என்னம்மா... இது...? எனக்கு போரடிக்க சான்ஸ் கொடுத்துட்டு... இவங்களை இப்படி அம்போன்னு விட்டால் எப்படி? ஏற்கெனவே கட்டிக்கப் போற மாமா மகன்கிட்ட எய்ட்ஸ் பற்றி இவங்க சொல்லி அவனுக்கு பாதிப்பைத்தியம் பிடிச்சிட்டாம்...’

சந்திரா, முதலில் முகத்தை ‘உம்’ என்று வைத்தாள். அசோகனை பொய்க் கோபமாய் முறைத்தாள். இறுதியில் சந்திராவும் அவர்களின் சிரிப்பில், தன் சிரிப்பைக் கலக்க விட்டாள்.

சிரித்த முகங்கள் சீரியஸாயின.

பலராமனும், சீனியம்மாவும் உள்ளேவந்தார்கள். அம்மா மகளின் கரம் பிடித்து, அதைக் கண்ணிரால் நனைத்தாள். அந்த இரண்டு டாக்டர்களையும் பார்த்து நீங்க நல்லா இருப்பிங்கன்னு’, கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு, மகளைப் பார்த்துப் பேசினான்.

‘அக்கா மகன் மோகன்ராம்... முட்டி மோதுறாம்மா... அப்பா படுத்த படுக்கையாய் கிடக்கார். அதனால்... அதனால் அவரால் அந்த ஏழை

t d-NoT&fTouNo...

அம்மாவால் பேச முடியவில்லை. அழத்தான் முடிந்தது. இதனால் பலராமன், அம்மாவிட்ட இடத்தை பூர்த்தி செய்தான்.

‘அப்பாவலே முடியல. அதனால பார்த்துட்டுப் போகலாமுன்னு அம்மாவைக் கூட்டிக்கிட்டு வந்தேன்.”

கலைவாணி, பலராமனை ஏறெடுத்துப் பார்த்தாள். அவன் முன்னாள் ‘தம்பி யாய் போனான்... அது என்ன பார்த்துட்டு போகலாமுன்னு ...

கலைவாணி, எந்தக் காக்கைக் குஞ்சுக்காக, கல்லோடு காவல் காத்தாளோ... அந்தக் குஞ்சுபோல துடித்தாள். சிறிது நேரத்திற்கு முன்பு, மனம் உற்பத்தி செய்த வைராக்கியம், மயான வைராக்கியமாய் விட்டது. நினைத்துப் பார்த்த சாதனையாளர்கள், நெஞ்சுக்குள்ளேபுதையுண்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/211&oldid=635654" இலிருந்து மீள்விக்கப்பட்டது