பக்கம்:பாலைப்புறா.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

மனோகர், ஒரே இழுப்பில் வாயில் வைக்கப்பட்ட பாதிச்சிகரெட்டுக்கு கொள்ளி வைத்துவிட்டான். நெருப்புயிர் போய், பிணமான அதன் சாம்பல், மீதிச்சிகரெட்டின்முனையில் இருந்து கீழ் நோக்கிச்சென்று, மேல் நோக்கிச் சென்று, வளைந்து வளைந்து, தேள்போல் தோன்றியது. சாதாரண சிகரெட்டை விட ஒல்லியான சிகரட், தொள தொளப்பானது. ஆனால் ஐம்பது ரூபாய்க்கும் அதிகமானது.

மனோகர், மீதிச்சிகரெட்டை அவ்வளவு சீக்கிரம் குடித்துவிடப்படாது என்பது போல், அதைக் கொஞ்சம் கொஞ்சமாக மூச்சுவிடச் செய்தான். அப்படி செய்தபடியே, அந்த அறையில், பல்வேறு கோணங்களில் வியாபித்துக் கிடந்த தோழர்களையும், தோழியையும் பார்க்கப் பார்க்க பரவசம்.

அந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளின் கண் எட்ட முடியாத புறநகர் பகுதி. ஆனாலும், அண்ணா நகரையும், அடையாரையும் புறந்தள்ளும் புதிய வார்ப்பு. பெரிய அதிகாரிகள், அரசியல் வாதிகள் ஒன்று சேர்ந்து வாங்கிப் போட்ட அத்தனை கிரவுண்ட்களிலும், ஒப்புக்கு அரசுக் கடனும், ஒப்பில்லாத ‘மற்றும் பலவும் மாட மாளிகையாய், கூட கோபுரமாய் எழுந்த பகுதி. குடிக்கக் கூட தண்ணிர் கிடைக்காத சமயத்திலும், சென்னைப் பெருநகர்அதுதான் மெட்ராஸ் மெட்ரோ வாட்டர் லாரிகள், ஒசைப்படாமல் குடிப்பதற்கு மட்டும் இல்லாமல், குளிப்பதற்கும், குளம் போல் தோன்றும், ‘சங்குகளில் நீச்சல் அடிக்கும் அளவிற்கு நீரைக் கொட்டும். ஒசைப்படாமல் ஊற்றும்... மின்சார வெட்டு என்பதே இல்லாத பகுதி. ஆங்காங்கே சுழல் விளக்குக் கார்கள்; துப்புரவுத் தொழில் செய்யும் போலீஸ் ஆர்டர்லிகள், சில

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/212&oldid=635655" இலிருந்து மீள்விக்கப்பட்டது