பக்கம்:பாலைப்புறா.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 பாலைப்புறா

வெள்ளையோடு வெள்ளையாய், தன்னை மறைத்துக் கொண்டிருந்தது. நித்தியகுமார் எழுந்து, அன்புமணி குத்திய ஊசியை வலுக்கட்டாயமாக பறிக்கப் போனான். உடனே எஸ்தர், அவனைத் தள்ளிப் போட்டாள்... கோபத்தில் இவன், அவளை அடிக்கப் போவதுபோல் கையை ஓங்கினான். பின்னர் எஸ்தர் பார்த்த கிறக்கப் பார்வையாலோ அல்லது அன்புமணியின் பேட்டைப் பார்வையிலோ, நித்தியகுமார், தலைக்குமேல் போன தன் கையை, நாட்டியமாடவிட்டு சிரிப்பாய்ச்சிரித்தான்.

மனோகர், எஸ்தருக்கு ஊசிபோட்டு முடித்த அன்புமணியின் பக்கமாய், உடம்பை நகர்த்தினான். அவனை ஊசியும், கையுமாய் பிடித்துக் கொண்டு கெஞ்சினான்.

‘கொட்ரா கொட்ரா!’

அன்புமணி கொடுக்கவில்லை... கையிலேயே ஊசிக் குழலைப்பிடித்த படி, மனோகருக்கு ஊசிப்போடப் போவது போல் ஊசியை அவன் கைப் பக்கமாய் கொண்டு போவதும், பிறகு பின் பக்கமாய் இழுத்தும் விளையாட்டுக் காட்டினான். மனோகர், பொறுமை இழந்து அங்குமிங்குமாய் ஆடிய அவன் கையைப் பிடிக்கப் போனான். ஆனால், அன்புமணியோ, தனது ஊசியை பம்பரமாய்ச்சுற்றவிட்டான்... மனோகரன் தலைக்கு மேலேயும், கீழேயுமாய் கொண்டு போனான். இதற்குள், சதாசிவன், சசி, நித்தியகுமார்களும், அங்கே தவழ்ந்து தவழ்ந்து நெருக்கியடித்தார்கள். ‘எனக்கு, எனக்கு...” என்றார்கள். உடனே அன்புமணி, அந்த ஊசிக்குழலை, நித்தியகுமாரிடம் நீட்ட, சதாசிவம் அதை அமைதியாப் பார்க்க, மனோகர் கூச்சலிட்டான். வழக்கமான நிதானம், அந்த புகையாலோ என்னவோ புகைந்து போனது.

‘ஏண்டா... இந்த ரூம் என்னுது... இந்த மருந்து என்னுது... அப்படி இருந்தும் எனக்கு ஒரு ரவுண்ட்தராட்டால் எப்படிடா?”

“எங்கே இன்னொரு வாட்டிச்சொல்லு!”

அன்புமணியின் கேள்விக்கு, மனோகர் பதிலளிக்காமல், நித்தியகுமார் தனக்குத்தானே போட்டுக் கொண்ட ஊசியைப் பார்த்தான். அன்புமணி, சாட்டையடியாய்ப் பேசினான்.

“ஏண்டா... அல்பம்... ஒன்புத்தியக் காட்டிட்டே பாரு... எப்போ, இந்த எய்ட்ஸ் குரூப்புல... சேர்ந்தியோ... அப்பவே நான் போய், நாம் வரணுமே. ஏண்டா வர்ல. ஏன்னா நீ அல்பம்’

‘தப்புதாண்டா மன்னிச்சுடு...’

“மன்னிச்சிட்டேன். ஆனாலும் ஒரு பாயிண்டைக் கிளியராக்கணும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/214&oldid=635657" இலிருந்து மீள்விக்கப்பட்டது