பக்கம்:பாலைப்புறா.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 215

இந்த ரூம் என்னோடது. சேலத்தில இருக்கிற எங்கடாடிக்கு தெரிந்தவரோட வீடு இது... நான் “லா காலேஜ்ல படிக்கிறதாய் நினைத்து.. இந்த ரூமை தந்தாங்க.... அதனாலதான் பத்தாயிரம் ரூபாய் வாடகைக்கு பாக்கி வருவதுவரைக்கும், பொறுமையாய் இருந்தாங்க. ஒன்னோட அல்பம் பத்தாயிரம் ரூபாய், எங்க டாடியோட ஒரு நாள்ஸ்டார்ஹோட்டல்தங்கலுக்கு பத்தாது. பாத்துப்பேசுடா மச்சி. நீ என்னோட டெனன்ட். ஒரு டெனன்ட்ட நான் சரிக்குச் சமமாய் நடத்துறேன் பாரு. அதுக்கு நீ பெருமைப்படனும்... இன்னொன்னுடா... நீ வந்த பிறகுதான், இங்கே கூடுறோம். இந்த அறையை புனிதமா வச்சிருந்தேன். ஒனக்காகத்தான், நீ சரியா டிரெயினிங் எடுக்கணுமுன்னுதான், எல்லாரும் இங்கே கூடுறோம்...”

‘தப்புதாம்பா மன்னிச்சுடுப்பா’ ‘சரி... சரி... யாரோகதவைத் தட்டுறாங்க. ரெண்டு விரட்டு விரட்டிட்டு

fr’ “

மனோகர், கதவைத் திறந்தான். எதிரே நின்ற பெரியவர் உள்ளே பார்க்க கூடாது என்பதுபோல, திறந்த கதவை மூடினான். பெரியவர், பக்கத்தில் இன்னொருவர்... பழைய முகமாய் தெரிந்தது. எதிர் வீட்டில் பார்த்த ஞாபகம்... முக்கால் கிழடு. கீழே இருப்பவர், முழுக்கிழடு.

மனோகர், அன்புமணியிடம் வாங்கிக் கட்டியதை, அவர்களுக்குக் கொடுக்கப் போனான்.

‘என்ன வேணும்?” ‘நானும்... நீ வந்ததுலே இருந்து பார்க்கேன். கதவையும் ஜன்னலையும் மூடிக்கிட்டு என்னப்பா செய்யுறீங்க?”

‘என்னமும்... செய்துட்டுப் போறோம்... உங்களுக்கு என்ன?” ‘சரி... ஒன்கிட்ட பேசி பிரயோசனம் இல்லே. அன்புமணியைக் கூப்பிடு”...

‘அன்புமணி... என்னோட டெனன்ட்... நான்தான் ஒங்களோட டெனன்ட். எது பேசணுமுன்னாலும் என்கிட்ட பேசுங்க. என்ன அநியாயம் இது... ஆளுக்கு ஆளு எகிறிக்கிட்டே போlங்க... குட்டக் குட்ட குனியுறீங்க... ஸாரி குனிய குனியக் குட்டுறீங்க!”

“நாங்க எப்போகுட்டுனோம். நீ எப்போ குனிஞ்சே.?” கோபப்பட்ட எதிர் வீட்டுக் கிழத்தை, உள்வீட்டுக்கிழம் தள்ளிக் கொண்டு போனது. ‘காலையிலே பேசிக்கலாம்...’ என்று சொன்னபடியே, இவர் அவரைத் தள்ளியபடியே பின் தொடர்ந்தார். அந்த எதிர் வீட்டுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/215&oldid=635658" இலிருந்து மீள்விக்கப்பட்டது