பக்கம்:பாலைப்புறா.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 பாலைப்புறா

பெரியவரோ, ரிஷிக் கர்ப்பம், இரவு தங்காது’ என்பது போல், மனோகரை திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே, எகிறி எகிறிய படி இறங்கினார்.

மனோகர், வெற்றிப் பெருமிதத்துடன் அறைக்குள் வந்தான். கதவை மூடிக் கொண்டான். அன்புமணி, அவனைக் கண்டுகொள்ளவில்லை... என்ன நடந்தது என்றும் கேட்கவில்லை... இப்போது, எஸ்தர், மனோகரை கையாட்டிக் கூப்பிட்டாள். அவன், அவளருகே உட்கார்ந்த போது, அவனை தன் மார்பில் சாய்த்துக் கொண்டாள். சேகர் குத்தி முடித்த ஊசியை வாங்கி, மனோகரை எதிர் பக்கமாய்த் திருப்பி அந்த ஊசிக் குழலால் நரம்பு ஊசி போட்டாள். அவள் ஊசியை எடுக்கப் போனபோது, மனோகர் இன்னும்... இன்னும் என்றான். அவள் எதுவும் பேசாமல் ஊசியை எடுத்தபோது, ‘சும்மா சொல்லப்படாது... எஸ்தர்...ஜப்பான் ஊசி மாதிரி ஊசி குத்தும் போது வலியே தெரியல’ என்றான்.

சிறிது நேரத்தில், அந்த அறைவாசிகள் அனைவரையும் போலவே, மனோகரும் தனது உள் உலகில் சஞ்சரித்தான். காலற்ற மிதப்புணர்வு; கைகளே சிறகுகளான ஆகாயப் பறப்பு... உடல், பஞ்சுமிட்டாயானது. கண் முன்னால், எடுத்த எடுப்பிலேயே தொலைக்காட்சிப் பெட்டியில் வருவது மாதிரி ஏழு வண்ணங்கள். இவை தோன்றி மறைந்து, ஏழேழு நாற்பத்தேழு வண்ணக் கலவைகள்... இவை ஒன்றோடொன்று கலந்து ஒராயிரம் வண்ணங்களைக் காட்டுகின்றன. பூமி, அவனைவிட்டு நழுவிப் போனாலும், ஆகாயம் அவனை அணைக்கிறது. அற்புதம்... அற்புதமான வண்ணக் கனவுகள். பிளாக் அன்ட் ஒயிட்டாய் தோன்றிய கலைவாணி, வானத்து தேவதையாகிறாள். அவன் தலையை வருடிக் கொடுக்கிறாள். ஏழேழு ஜென்மங்களிலும், ஒனக்கு நான்... எனக்கு நீ, என்கிறாள். ஒவ்வொரு வண்ண விரிப்பிலும் ஒரு ஜென்மம் எடுக்கிறாள். அமெரிக்காவில் இருந்து வெற்றிகரமாய் திரும்பும் அவனை, விமான நிலையத்தில் எதிர் கொள்கிறாள். கம்பெனி சகாக்கள் அவனுக்கு மாலை சூடும் போது, அவள் தானே ஒரு மாலையானது போல, அவன் மார்பில் சாய்ந்து, கழுத்தை பூங்கரங்களால், சுற்றிக் கொள்கிறாள். எல்லாவற்றிற்கும் மேலாய், கணிப்பொறித்துறையில் மகத்தானசாதனைகள் நிகழ்த்தியதற்காக, குடியரசுத் தலைவர், அவனுக்கு விருது வழங்குகிறார். பத்திரிகைக்களும் தொலைக்காட்சிகளும், அவனைப் படம் படமாய் போட்டு, சப்ளிமெண்ட்’ வெளியிடுகின்றன. கூடவே டாக்டர் சந்திரா, அவனுக்கு எய்ட்ஸ் இல்லவே இல்லை என்கிறாள்.

மனோகர், ஊசி முனையில் தவம் இருக்கும் முனிவர்கள் போல், சொர்க்க லோகத்திற்குள் போய்விட்டான். அங்கிருந்து எட்டிப்பார்க்கிறான். நாராயணசாமியும், சங்கரனும் நரகத்தில் தவிக்கிறார்கள். தவசிமுத்தும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/216&oldid=635659" இலிருந்து மீள்விக்கப்பட்டது