பக்கம்:பாலைப்புறா.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 217

அங்கே தவளை மாதிரிகத்துகிறார். அருகே நிற்கும் கலைவாணி, அவர்களை கைதுக்கி விடச் சொல்கிறாள். அவனும், அப்பனைத் தவிர, அந்த இருவரையும் தூக்குவதற்குக் கையை நீட்டுகிறான். நீட்டிக் கொண்டே போகிறான். ஒரு அரக்கன் வருகிறான். இவன் அவனது பெயர் கேட்கிறான். உடனே அவன் ‘எய்ட்ஸா சூரன், என்கிறான். அடுத்து இவன் நெற்றிக் கண்ணைத் திறக்கிறான். சூரன்கருகிப் போகிறான். பூலோகத்தார், அவனைக் கையெடுத்துக்கும்பிடுகிறார்கள்.

மனோகர், போதை மருந்துலகில் புத்தம் புதுக் கனவுகளை கொடுத்துக் கொண்டிருந்தான். விருப்பங்களை வீடியோகாட்சிகளாய்க் கண்டு களித்துக் கொண்டிருந்தான். எஸ்தர், திடீரென்று அவன் மீது சாய்கிறாள். இவன், அவள் மார்பில் தலைபோட்டு, மடியில் உடல் போட்டுக் கொள்கிறான். இருவரும் வெளிப்படையாய் அசையாப் பொருளாய்க் கிடக்கிறார்கள். பிறப்பறுத்த ஒளி உடம்பு... மனம் செத்த மயக்கலோகம்.

அந்த அறைவாசிகள் அனைவருமே, கால, நேர, வர்த்தமானங்களைக் கடந்து, ஒரு அதிசய உலகிற்குள் குதூகலிக்கிறார்கள். சாவில்லா பிறப்பு. பிறப்பில்லா உயிர்ப்பு. நோயற்ற பெருவாழ்வு... பூலோகம் நிழலாகிறது... போதை உலகம் நிசமாகிறது... ஒரு மணி நேரமோ, இரண்டு மணி நேரமோ, அந்த அளவுக்கு ஆயுளைக் கொண்ட சொர்க்கம்.

திடீரென்று, அன்புமணியும் நித்தியகுமாரும் இந்த அதிசய உலகில் இருந்து கீழே விழுகிறார்கள். வலி பொறுக்க முடியாமல், கத்துகிறார்கள். இருவருக்கும் கையாடுகிறது. காலாடுகிறது. உடம்பு மொத்தமும் ஒட்டு மொத்தமாய் ஆடுகிறது. பற்கள் கூட ஆடுவது மாதிரியான வாயாட்டம்... அன்புமணி, தனது காலை யாரோமுறுக்குவது போல் காலை வளைக்கிறான். நித்தியகுமார், கழுத்தை யாரோ நெரிப்பது போல் கோழிக் கத்தலாய்க் கத்துகிறான். அவர்களுக்கு வழக்கம் போல் புரிகிறது. இந்த ஆட்டமும் வாட்டமும், இன்னொரு தடவைகுத்தினால்தான் போகும். அப்போதுதான், இந்த நரகத்தின் மதிலில் இருந்து, திரிசங்கு சொர்க்கம் போய், அங்கிருந்து தேவலோகத்திற்குத் தாவ முடியும்.

அன்புமணி, ஒருடலும் ஈருயிருமாய்ப் பின்னிக் கிடந்த எஸ்தரையும், மனோகரையும் இரண்டாகப் பிரித்தான். ஆணாகவும், பெண்ணாகவும் அல்ல. தலைகளாகவும்’, ‘கால்களாகவும்'; பின்னர், கண்ணதிர, காததிரக் கத்தினான்.

‘மனோ... மனோ பணம் தாடா... மருந்து வாங்கிட்டு வாறேன்.... ஜல்திடா... அப்புறம் அவன் போய்டுவாண்டா...’

மனோகர்கேட்கப் போனான். இருபதாயிரம் ரூபாய்லே, பத்தாயிரத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/217&oldid=635660" இலிருந்து மீள்விக்கப்பட்டது