பக்கம்:பாலைப்புறா.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

1ம்னோகர், நீலநிறப் பின்னணித்துணியில் சிவப்புக்கோடுகள் போட்ட சட்டையைக் கழட்டி, உடம்பு முழுவதையும் துடைத்தான். தொள தொளப்பான லுங்கியை, ஒரு கையால் தூக்கித் தூக்கி, ஆட்டி ஆட்டி வியர்த்துப் போன கால்களுக்கு விசிறியாக்கினான். கண்களை இறுக்கிக் கொண்டு, நினைவுபாதையில் பின்னோக்கி நடந்தான். ஒடினான், தள்ளாடினான், விழுந்தான். மனத்தில் பதிந்த வண்ணக்காட்சிகளுக்கு ஏற்ப வர்ணனை கொடுத்தான்.

‘எங்க ஊர், ஆறு பாய்கிற கிராமம் இல்ல. கரிசலான பொட்டல் காடுமில்ல... குளமுள்ள ஊரு. குளம்னா சாதாரண குளமல்ல. ஏரிக்கும் குளத்திற்கும் இடைப்பட்ட தேக்கம். எங்கேயோ பாயும் ஆறில் இருந்து வெட்டப் பட்டகால்வாய் வழியாய் நீர் வழங்கும் குளப்பாசனம்... இதன் வயல்காட்டில் இருந்து ஒரு ஒடை பிரிக்கிற தோட்டக்காடு. குளம், நிறை மாத கர்ப்பிணியாய் இருக்கும் போது, நஞ்சைக் கிணறுகள் பொங்கி பிரசவிக்கும்.... புஞ்சைக் கிணறுக்கு எட்டு மாதமாகும்’

‘அறுக்காதடா... சலிப்பூட்டுறது நல்ல வர்ணனை... இல்லடா...’

‘இப்படிப்பட்ட சமயத்தில, நான் எஞ்ஜினியரிங் காலேஜை முடிச்சிட்டு, என்னைத்துரத்தினகம்பெனியில் வேலைக்கு சேர்ந்த நேரம்... கேம்பஸ் இன்டர்வியூவில் நான்தான் இரண்டாவது... மாணவப் பருவத்தில் இருந்த தாழ்வு மனப்பான்மை, தன்னம்பிக்கையாய் மாறுன நேரம்... மாதச் சம்பளம் பத்தாயிரத்துக்கு மேல. நட்சத்திர ஹோட்டல் சகவாசம். ஆகாயத்தில் பறக்கிற ஆனந்தம்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/220&oldid=635664" இலிருந்து மீள்விக்கப்பட்டது