பக்கம்:பாலைப்புறா.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 221

‘வாடாப்பூவை பார்க்கறதுக்கு நான் எவ்வளவு நேரண்டா காத்துக்கிடக்கிறது?”

‘சொந்தக்காலுல நிற்கிற பெருமிதத்தோடு, ஊருக்கு போனேன். சின்ன வயசிலேயே, அந்தர் அடித்த எங்க கிணத்தில் ஒரு பல்டி அடிக்க ஆசை. கிணற்றுக் குத்துக்காலில் ஏறி நின்னு... கிணத்துக்குள்ளே தலை கீழாய் பாய்வேன்... தலைகீழாய் தாவி, மல்லாந்தும் விழுவேன். ஒரு நாள் உச்சி வெயில்... ஒரே எரிச்சல்... சூரியன்சுட்டது... சோளத்தட்டைகளும், கிணற்று மேடும் மறைக்கும் எங்க கிணற்றுக்குள்நிலை நீச்சலாய்நின்றேன்...அதாவது கவிழ்ந்து படுக்காமல், காலையும் கையையும் லேசு லேசாய் ஆட்டி, செங்குத்தாய் நிற்பது... நின்றேனா...’

‘வெளியே ஒரு அழுகைச் சத்தம்... இடையிடையே விசும்பல்... விக்கல். நான், அவசர அவசரமாய் மூலைப்படிக்கு வந்து, மேலே உள்ள ஒவ்வொரு படியாய் ஏறி, ஏறி வெளியே வந்தேன். வாடாப்பூஅழுது கொண்டு நின்றாள். அங்கேயும் இங்கேயுமாய் அல்லாடினாள்... என் வயதுக்காரி. தொட்டால் ஷாக் அடிக்கும் உடல்; கண்ணை சுகமாக்கும் நிறம்... அவள் கன்னத்தில் ஒரு கையின் அடையாளம்; கன்னமேடு, ஏற்ற இறக்கமாய் இருந்தது. அவள்நெற்றிப் பொட்டில் ரத்தத்தலைமுடி, யாரோ பிடித்துவிட்ட சிலிர்ப்போடு கூம்பிக் கிடந்தது... என்னைப் பார்த்ததும், அவள் மலங்க மலங்க விழித்தாள். ஜட்டியோடு நின்ற என்னைசங்கோஜமாய் பார்க்காமலே, படபடப்பாய், பின்னால் திரும்பித்திரும்பி, பயந்துபயந்து சொன்னாள். ‘என் புருஷன்... ஒரு கையிலே சாட்டைக் கம்போடவும், இடுப்லே சூரிக்கத்தியோடும், என்னை விரட்டுறான். என்னைக் காப்பாத்து.. காப்பாத்துன்னு கதறினாள். நான், உடனே பம்பு செட்டுக் கதவைத் திறந்து, அவளை உள்ளே போகச் சொன்னேன்... சந்தேகம் வராமல் இருக்க, கதவையும் இழுத்து மூடி பூட்டிட்டேன். ஐந்தே ஐந்து நிமிடத்திற்குள்ளே, வாடாப்பூ வீட்டுக்காரன் மரியப்பன் வந்தான். அவனை எல்லோருமே லாரிக்கார மாரியப்பன்னேசொல்லுவாங்க... வெட்டரிவாள்மீசைக்காரன்... பயமுறுத்தும் கண்கள்; சிலர்குடிக்காவிட்டால், ஆடு, குடித்தாலோ ஒநாய்... ஆனால் இவன் எப்பவுமே ஒரு போக்கிரி... அசல் கழுதைப் புலி... என்னை பார்த்து, ‘என் வீட்டுக்காரி மூதேவி இங்கே வந்தாளா?’ என்றான். அவள் கிடைக்கவில்லையானால், என்னை வெட்டப் போகிற மாதிரி; நான் ‘இல்லியண்ணே என்று சொல்லிவிட்டு, ஒப்புக்கு, அவனோடு சேர்ந்து அங்குமிங்குமாய் தேடினேன். அப்புறம் ‘ஒரு பெண்ணை... ஒன்னை மாதிரி, ஒரு வீரன் அடிக்கலாமா அண்ணே என்று கேட்டேன். ‘நான் அவளை அடித்தேன்னு ஒனக்கு எப்படித் தெரியுமுன்னு? சந்தேகமாய் கேட்டான். உடனே ‘புத்திசாலியா நான் இன்னைக்கி கன்னத்தில கை பதியும்படியா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/221&oldid=635665" இலிருந்து மீள்விக்கப்பட்டது