பக்கம்:பாலைப்புறா.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 பாலைப்புறா

அடித்ததைச் சொல்லல... முன்னால அடித்ததை சொன்னேன்னு சொன்னேன். நல்ல வேளையாய், அப்போப் பார்த்து பனையேறி மாமா மேகலிங்கம், கலையங்கள், முறுக்கு தடியில் தொங்க வந்தார். கள்ளு வேணுமாடா... கள்ளு என்று மாரியப்பனைப் பார்த்துக் கேட்டார். அவன் சப்புக் கொட்டினான். பனையேறி மாமா, அவனை ஒரு கள்ளு கலசத்தைதுக்க வைத்துக் கொண்டு, அவன் முதுகைத் தள்ளினார். பிறகு, என் பக்கமாய் ஓடிவந்து, பனைமரத்துல பாளை சீவும் போது பார்த்துட்டேன்... வாடாப்பூவை... பாவம்... பக்குவமாய்... அனுப்புன்னு சொல்லிட்டு போயிட்டார். நான் சிறிது நேரம் சிலையானேன். அப்புறம் கிணற்றுக்குள் போட்ட கல்லானேன். அரைமணி நேரத்திற்குப் பிறகு, பம்பு செட்டுக்கதவு தட்டப்பட்டது. நான் பயந்தபடியே திறந்தேன்... மாரியப்பன்வந்திடுவானோ என்ற பயம். கள்ளு மாமா கவனித்துக் கொள்வார் என்ற ஆறுதல். கதவைத் திறந்தேன்; வாடாப்பூ, பேய் பிடித்தவள் போல் கண்களை அகலமாக்கி, தலைமுடியை விரித்துப் போட்டு, தன்னை மறந்து நிற்பதுபோல் நின்றாள். அவளுக்குப்பைத்தியம் பிடித்துவிட்டதோ என்று எனக்குப்பயம்... அதற்கு ஏற்ப, தலையில் ஒரு குடம் இருப்பதுபோலவும், அதைப் பிடித்துக் கொண்டு இருப்பது போலவும், கைகளைதலைக்கு மேல் கொண்டு போய், அப்படியே வைத்திருந்தாள். உடனே நான், பம்ப் செட் தரையில் கசிந்த நீரை உள்ளங்கையில் ஏந்தி, அவள் முகத்தில் அடித்தேன். நெற்றிப் பொட்டில் உறைந்த ரத்தத்தை, எனது லுங்கி முனையில் துடைத்துவிட்டேன். எந்த விகற்பமும் இல்லாமல், அவள்முதுகைத் தட்டிக் கொடுத்தேன். இத்தகைய ஆண் ஆதரவு, இதுவரை கிடைக்காததாலோ என்னவோ, வாடாப்பூ முட்டி மோதினாள். கதவில் தலையை மோதவிட்டாள். உடனே நான், அப்போதும் எந்த விகற்பமும் இல்லாமல், இனிமேல் நீ... இவனோட வாழப்படாது... ஆனால், கொஞ்ச நாளைக்கு பல்லைக் கடிச்சிக்கோ., மெட்ராஸ்லே என் கம்பெனியிலே உனக்கு நல்ல வேலையா வாங்கித் தாறேன் என்றேன். இதைக் கேட்டதும் அவள் ‘நீ சொன்னதே போதும் என்று அரற்றியபடியே, என் கழுத்தை ஒரு கதவாக நினைத்து, அதில் முகம் போட்டு, முட்டி போதினாள். நான் அவள் முகத்தை நிமிர்த்தி, அவள் தலையைக் கோதிவிட்டபோது, அந்தப் பஞ்சும் இந்த நெருப்பும் பற்றிக் கொண்டன. எல்லாம் முடிந்ததும், அவள் ஒலமிட்டாள். மாரியப்பன் கொடுக்காத அழுகையை, நான் கொடுத்துவிட்டேன். நானும் கைகளை நெறித்தேன். கால்களைதரையில் உதைத்தேன்’...

மறுநாளே, மாரியப்பன் லாரியில் போய்விட்டான். திரும்பி வர மாதமாகும். நான், உச்சி வெயில் வராத காலையிலும், மஞ்சள் வெயில் அடிக்கும் மாலையிலும் தோட்டத்துக்குப்போனேன். வாடாப்பூவும் புருஷன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/222&oldid=635666" இலிருந்து மீள்விக்கப்பட்டது