பக்கம்:பாலைப்புறா.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 223

விரட்டாமலே வந்தாள். நெற்றியில் குங்குமம் வைத்து, தலைமறைய பூ வைத்து, காலையில் ஆட்டுக்கும் மாலையில் மாட்டுக்கும் புல்வெட்டுவதாய் போக்குக்காடடி வந்தாள். மத்தியானம் தலை மறைவாய் வந்தாள். நான் வாக்குக் கொடுத்ததுபோல், கலைவாணியோட சம்மதத்தில், அவளுக்கு கம்பெனியில... ஒரு வேலைவாங்கிக் கொடுக்கநினைத்தேன். அதுக்குள்ளே எல்லாமே எய்ட்ஸாயிட்டு. சும்மா சொல்லபடாது. கலைவாணியோடு என் திருமணம் நிச்சயமானதும், வாடாப்பூ என்னைத் திரும்பிக் கூட பார்ப்பதில்லை... பாவம் என்னைப் போல், அவளுக்கும் எய்ட்ஸ் நிச்சயம்... அவள் மூலம் ... எனக்கும், மாரியப்பன் மூலம் அவளுக்கும்... எவ்வளவு பெரிய ரத்த பந்தம் பாரு...’

‘ஒகே... நெக்ஸ்ட்...’

“அப்புறம் தேனம்மா...’

“ஒன் மினிட்... தேனம்மா எப்படி இருப்பாள்? கொஞ்சம் பொறு... காமிராக் கண்களை அட்ஜெஸ்ட் செய்யறேன்... கலர் வந்துட்டு. சொல்லு. எப்படி இருப்பாள்...?”

“என்வயதுக்காரி... வாழைப்பூநிறம்... என்காதளவு உயரம்... பாக்குமர நளினம். ஆமணக்கு செடியின் சாயல், முத்தம் கொடுக்க போவது போல் குவியும் உதடுகள்’

‘'நீ கவிஞன்டா... அதனாலயே பொம்பளைக் கள்ளன்டா... லேடி கில்லர்டா.., சரி சொல்லுடா’

‘இந்த தேனம்மா... வாடாப்பூவோட உயிருக்கு உயிரான தோழி. என்னை, எங்கே பார்த்தாலும், அங்கேயே நிதானமாய்... பொதுப் படையாய் பேசுறவள். வாடாப்பூ உறவுக்குப் பிறகு என்னைப் பார்த்தால், குறுஞ்சிரிப்பாய் சிரிக்கிறதும்... நிற்காமலே ஒடுறதுமாய் ஆகிட்டாள். ஒரு துணி வியாபாரியோட பெண்டாட்டி... அந்த ஆசாமி ஊர்ல. இருக்கிறதே அதிசயம்... பம்பாய் ஹைதராபாத் என்று சேலை மூட்டைகளைத்தூக்கிட்டு நகரம் நகரமாய் அலையுறவன்... ஒருநாள், தோட்டத்துப் பக்கமாய் எதற்கோ வந்த இந்த தேனம்மா கிட்டே கேட்டுட்டேன்... ‘எதுக்காக என்னைப் பார்த்துட்டு ஒடுறே ன்னு கேட்டேன். ‘பார்க்கிறவங்க தப்பா நினைக்க மாட்டாங்களான்னு கேட்டேன். உடனே அவள் சிரித்தாள். பிறகு எனக்கு எல்லாம் தெரியும்... வாடாப்பூ சொன்னாள்'ன்னு வெட்கத்தோடு சொன்னாள். நான் பயந்துட்டேன். விவகாரம், மாரியப்பன் காதுக்குப் போனால், அவன் பேசமாட்டான். அவனோட சூரிக்கத்திதான் பேசும்... அந்தக் காட்சியை நினைத்து கண்ணை மூடினேன். அப்புறம் திறந்தால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/223&oldid=635667" இலிருந்து மீள்விக்கப்பட்டது