பக்கம்:பாலைப்புறா.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 225

‘ஆனந்தி இருக்காளே.. அவள் அழகுக்கு, கலைவாணி ஈடாக மாட்டாள். நான், பள்ளிக் கூடத்தில் எட்டு படிக்கும் போது, இவளும் கலைவாணியும் ஐந்து படித்தார்கள். காலையில் பிரேயர் கூட்டம். கன் டயம்லே நடக்கும்; தலைமை ஆசிரியர், தேசிய கொடி ஏற்றுவார். அந்தக் கொடியையே அடிக்கப் போவதுபோல், டிரில் மாஸ்டர் கையில் பிரம்போடு நிற்பார். லேட்டாய் வருகிறவர்கள், ஒரு ஒரமாய் நிற்கணும். பிரேயர் முடிந்ததும், தலைமை ஆசிரியர், டிரில் மாஸ்டரோட ஒரம் கட்டப்பட்ட மாணவ, மாணவிகளிடம் வருவார். ஒவ்வொருவர் கிட்டயும் காரணம் கேட்பார். நான் தாமதத்திற்கு சொன்ன காரணம், தலைமை ஆசிரியருக்கு பிடிக்கவில்லை... உடனே, டிரில் மாஸ்டரைப் பார்த்து கண்ணசைத்தார். உடேன அந்த டிரில், என்னையே டிரில் போடப் போவது போல் உற்றுப் பார்த்தது. ஆசாமிக்கு குதிரை முகம். ஒநாய் பார்வை. அன்றைக்குப்பார்த்து பிரம்பு கொண்டு வரவில்லை. உடனே, ஐந்தாவது வகுப்பறைக்குள் வரிசையாய் போன ஒரு மாணவனைப் பார்த்து, தன்னோட, அறையில் இருக்கிற பிரம்பை எடுத்து வரச்சொன்னார். அதுக்குள்ளயே இந்த ஆனந்தி, பக்கத்தில் கிடந்த ஒரு வாத மடக்கிக் கம்பை எடுத்து, டிரில் மாஸ்டரிடம் நீட்டினாள். கலைவாணி அவளைத்தடுத்தாள். கட்டிப்பிடித்தாள். ஆனாலும், ஆனந்தி அவள் தலைக்கு மேலே கம்பைக் கொண்டு போய், டிரில் மாஸ்டரிடம் ஒப்படைத்தாள். அவர் என்னை புறங்கையை காட்டச் சொல்லி, வாங்கு வாங்குன்னு வாங்கிட்டார். அதுக்கு முந்தின நாள், அவர் நடந்து போன போது சைக்கிளில் போன நான் இறங்கவில்லை... அந்தக் கோபம் அவருக்கு... ஆனந்தியைத் தடுத்த கலைவாணிக்கும்... உள்ளங்கையில் பிரம்படி... கை சிவக்கும்படி ...’

‘எல்லாருக்கும் ஸ்கூலுல அடி கிடைக்கும்... இதா பெரிசு... அந்தச் சின்னஞ்சிறிசு கிட்டே வாடா...’

‘ஆனந்தியைப் பார்த்தாலே எனக்கு பற்றி வரும். இதனாலயே ஊருக்கு நான் போகும் போது, அவளைப்பார்த்தால் ஒதுங்கிக் கொள்வேன். அவளும், அலட்டிக்க மாட்டாள். ஒரு தடவை, என்னைக் காப்பியடித்தாள்; அதாவது பார்த்துவிட்டு திரும்பிப் போனாள். காலயில் கரெக்டா எட்டு மணிக்கி, எங்க தோட்டத்துக்கு பக்கத்தில் உள்ள அவள் தோட்டத்துக்கு பிளாஸ்டிக் கூடையில் மாற்றுப்புடவை வகையறாக்களைவைத்துக் கொண்டு போவாள். ஒரு வண்ணத்துண்டு மட்டும் தோளுல தொங்கும். அவள் தோட்டம் ஒரு பனந்தோப்பு. இடையிடையே தென்னைமரங்கள், கோணி நிற்கும். ஒவ்வொரு பனையும் ஒரு ராட்சதனின் முகம் போலவும், தென்னை ஒலைகள், அவன் மீசை போலவும், கீழே நிற்கும் விடலிகள், அவன் காலணிகள் போலவும்...’ LIIT. 15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/225&oldid=635669" இலிருந்து மீள்விக்கப்பட்டது