பக்கம்:பாலைப்புறா.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 பாலைப்புறா

‘அறுக்காதே... அறுக்காதேடா... அதுக்குன்னே நித்தியகுமார் இருக்கான்’

‘சரி... அன்றைக்கும் ஆனந்தி... தோட்டத்துக்கு, தோளுல துண்டு துலங்க போனாள். போயிட்டு சிறிது நேரத்தில் எங்க கிணற்றுப் பக்கமாய் வந்தாள். அவள் போகும் போது பல்லைக் கடித்தபடி போனாள். இப்பவோ, பல் தெரிய வந்தாள். ‘எங்க பம்ப் செட்டுல மோட்டார் ரிப்பேர்... எனக்கு காலேஜ்ல ஷவர்ல குளித்துப்பழக்கமா... அதனால பம்ப் தண்ணிர்லே தலையைக் கொடுக்கிறது ஒரு சந்தோஷமா... லோ... மோட்டாரை ஆன் செய்துட்டுப்போங்க...நான் குளிச்சிட்டு செட்டை பூட்டிட்டு.சாவியை என் தம்பி மூலம் கொடுத்தனுப்புறேன்’ என்றாள். நான் தலையாட்டிவிட்டு, போகப் போனேன். பிறகுதான், எனக்கு ஞாபகம் வந்தது. நானோ, தங்கை மீராவோ வேலையாட்களோ, பம்ப்செட் தண்ணீரில் குளித்து கரெண்டையும் தண்ணிரையும் வேஸ்டாக்கிடபடாதுன்னு... எங்கப்பன்... மோட்டார் ஸ்விட்சை உல்டாவாய் வைத்திருந்தார். நான் இதைச்சொல்வதற்காக பம்பு செட்டுக்கு பக்கமாய், வேகவேகமாய் போய் விளக்கமளித்தேன்... உடனே அவள்... ‘கிண்டலா என்ற போது, உள்ளே போய் ஸ்விட்சை “ஆன்” செய்தேன்... அவளும் உள்ளே வந்தாள். எப்படியோ நான் ‘ஆன் ஆனேன். அவள் ‘ஆப்’ ஆனாள்.’

‘அடேய் பாவி.. அந்த ஆனந்தியையே கட்டியிருக்கலாமேடா...?”

‘இருக்கலாம். ஆனாலும் அது ஒரு செக்ஸ் விபத்து... அவ்வளவுதான்... அதோட ஒரு நாள் தேனம்மாவையும், என்னையும் அதே பம்ப் செட்டுல பக்கத்தில் பக்கமாய் பார்த்துட்டாள். வேறு யாராக இருந்தாலும், வெளில டமாரம் அடித்திருப்பாள். தேனம்மாவோட குட்டை உடைச்சால், தன் குட்டும் தானாய் உடையுமுன்னு நினைத்தாளோ என்னமோ ஒதுங்கிட்டாள்...”

‘'நீ ஒரு உமனைசர்டா’

“ஆமாம். எந்தப் பெண்ணையும் போனாப் போகிறதுன்னு நான்தான் விட்டுவைக்கிறது. அப்புறம் எங்கஅக்காவோட நாத்தனார். இப்போக்கூட எதிர்வீட்டு பொண்ணு வலிய வலிய வந்து சைட் அடிக்காள். அதனாலதான் அவளோடதாத்தா.. இந்த வீட்டுக் கிழத்தோட வந்து கத்திட்டுப் போறார்...’

‘'அடேய்... பாவி... வேண்ாண்டா... ஒன்னோட எய்ட்ஸ் அவளுக்கு வந்து டப் படாது டா. அக்கிரமக்காரிங்ககிட்டே.. அடங்காப் பிடாரிங்க கிட்டே வேணுமுன்னா... போ... ஆனால் அப்பாவிப் பெண்களை... விட்டுடா. பிராமிஸ் பண்ணுடா. ஒனக்கு வேணும்னா...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/226&oldid=635670" இலிருந்து மீள்விக்கப்பட்டது