பக்கம்:பாலைப்புறா.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 227

நான் இருக்கேன்டா...’

‘நானும் மனுஷன்தான் எஸ்தர்’

‘அப்புறம்... கலைவாணியை மட்டும் ஏண்டா... கல்யாணத்துக்கு முன்னால விட்டு வச்சே.”

‘கலைவாணியைப் பார்க்கும் போது... குறைந்தபட்சம் எனக்கு, அவளைக் கையெடுத்துக்கும்பிடணும்போல தோணியது. அவள் பேசுறதை கேட்கத் தோணும். பேசுற வாய்க்கு முத்தம் கொடுக்க தோணாது... ஒண்டர்புல் கேர்ல்... அதோடு அவளையே கட்டிக்கலாமுன்னும் ஒரு விருப்பம். கல்யாணத்துக்கு முன்னால் கட்டிக்கப் போற என்னால் கூட... அவள் கன்னி கழியப்படாதுன்னு ஒரு விருப்பம்...’

‘நீ... ஒரு செல்பீஷ் பெல்லோ... ஆனாலும், கலைவாணியை நினைத்தாலே எனக்கு குமட்டுது.. மனுவியா அவள்? ஒன்னை மட்டும்... அவள் அப்படி அம்போன்னு விட்டுட்டுப் போகாட்டால்... நீ பம்பாயிலோ... இல்லாட்டி டில்லியிலோ.. வேற கம்பெனில சேர்ந்து... வேலை பார்த்திருக்கலாம்... அதுவும் இல்லாட்டி... ஒனக்கு கிடைத்த இரண்டு லட்சம் ரூபாய்ல... ஒரு சின்ன யூனிட்டை ஆரம்பித்திருக்கலாம்... நீங்க ரெண்டு பேருமே காரும், வீடுமாய் இருக்கலாம். இப்படி அன்புமணி பாஸ்டர்ட்கிட்ட சிக்கி இருக்க வேண்டாம். இவன் கிட்டே ஜாக்ரதையா இருடா... பொல்லாத போக்கிரிடா...’

எஸ்தர் துள்ளிக் குதித்து நின்றாள்... அன்புமணியின் கழுத்தை அப்போதே நெரிக்கப் போவதுபோல், இரண்டு கரங்களையும் குவித்தாள். மனோகரும் எழுந்தான். அவளை தோள் தொட்டு, அழுத்தி அழுத்தி, தரையில் மீண்டும் உட்கார வைத்தான். சிறிது நேரத்தில், எஸ்தருக்கு போதை முழுவதுமாக தெளிந்துவிட்டது. தெளியத் தெளிய வேதனை... உடலெல்லாம் நடுக்கம்... முகம், பின் பக்கமாய் திரும்பப் போவதுபோல் சுழன்றது. மனோகர், அவள் தலையைப் பிடித்துக் கொண்டான். குலுங்கிய கால் கைகளைப் பிடித்து விட்டான். ஆனால், எஸ்தரோ கதவைத் திறந்து வெளியே வந்து நின்றாள். மாடிச் சுவர்களில் சரிந்து கீழே தொங்கினாள். இப்போது, அன்புமணி அவளுக்கு ஒரு அதிசயமாய்த் தெரிந்தான். அவள் ஆட்டத்தையும், வாதையையும் கழித்து கட்டிவிட்டு, அவளை இழந்த சொர்க்கத்திற்குள் கூட்டிப் போகும் போதை மருந்து புருஷோத்தமனாய் தென்பட்டான்.

எஸ்தர் பொறுமை இழந்தாள். மனோகரை, கைகளால் பிராண்டினாள். பலதடவை நச்சரித்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/227&oldid=635671" இலிருந்து மீள்விக்கப்பட்டது