பக்கம்:பாலைப்புறா.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

229

கலைவாணி மூன்று அறைகளையும் பெருக்கி முடித்துவிட்டு, கையில் துடைப்பத்தோடு வராண்டாவிற்கு வந்தாள். குண்டும் குழியுமாய், தூசியும் தும்புமாய் உள்ள தரையைக் கவனிப்பதற்கு முன்பு, மேல் கூரையையும், நான்கு சுவர்களின் முக்கடிகளையும் துப்புரவு செய்ய வேண்டும் போல் தோன்றியது. அவற்றில் சிலந்தி வலைகளும், தூசி துப்பட்டைகளும் இன்னொரு மருத்துவமனைபோல் தோன்றியது. அண்ணாந்து பார்த்தவள், ஒட்டடைக் கம்பைக் கொண்டு வந்து, பாதங்களின் பின்பகுதியைத் தூக்கி, கால் விரல்களில் நின்றபடி, அவற்றைச் சாடினாள். அப்படியும் எட்டாத வலைகளை, இளக்காரம் செய்த கருந்திட்டுக்களை, இரண்டு கையாலும் ஒட்டடைக் கம்பைப் பிடித்தபடியே, குதித்துக் குதித்து சாய்த்தாள். இன்னும் எட்டாத இடத்தைத் தொட்டுத் துலக்குவதற்காக, ஒரு முக்காலியைக் கொண்டு வந்து, அதில் ஏறி, வெண் சாமரம் போலான அந்த ஒட்டடைக் கம்பைத் தூக்கியபோது, அவளையும் அந்தக் கம்பின் அடிவாரத்தையும் சேர்த்து, ஒரு கரம் பிடித்தது. அப்படி பிடித்த கையோடு கீழே குனிந்து பார்த்த கலைவாணியிடம், சந்திரா சாடினாள்.

‘'நான் ஒன்னைத் தோழியாய்த்தான் கூட்டி வந்தேனே தவிர.. வேலைக் காரின்னு இல்ல... என் பாவத்துக்கு கங்கையில் மூழ்கிறதுக்குப் பதிலாய்... அந்தக் கங்கையையே இங்கே கொண்டு வந்தது மாதிரி... கொண்டு வந்திருக்கேன்...’

‘அப்போ... கங்கை, வீட்டைக் கழுவி விடுறதுல தப்பில்லயே... என்னைவிடுங்க.. இன்னைக்கு... தரையைக் கழுவி விடணும். கழுவாமல் துடைக்கிறது, டாக்டர் முஸ்தபா காப்பர்-டியை எடுக்காமல், ஆபரேஷன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/229&oldid=635673" இலிருந்து மீள்விக்கப்பட்டது