பக்கம்:பாலைப்புறா.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 பாலைப்புறா

செய்தது மாதிரி...”

‘ஒன்கிட்ட பேசிப் பிரயோசனம் இல்ல... எம்மா இங்கே வாங்கம்மா...?”

சமையலறையில், தட்டுமுட்டுச் சத்தங்களை உண்டாக்கிக் கொண் டிருந்த அம்மாக்காரி ராசலட்சுமி, ஈரக் கரங்களை முந்தானைக்குள் விட்டுத் துடைத்தபடியே வந்தாள். அன்று, முதல் தடவையாகப் பார்ப்பவர்களுக்கு அவள் மொக்கையான கையை மறைத்து வைத்திருப்பதுபோல் தோன்றலாம்...

‘ஏம்மா... இந்தப் பொண்ணவேலை செய்ய விடுறீங்க..” ‘நல்லா இருக்கே கூத்து... நான் எதுக்கு வேல வாங்குறேன்”

‘வாங்குறீங்கன்னு சொல்லல... இப்படி அரக்கப் பரக்க வேலை செய்யும் போது... நீங்க தடுக்கலாமே...’

ராசலட்சுமி, மகளையும், முக்காலியில் வளைந்து நின்ற கலைவாணியையும் ஏற்ற இறக்கமாய் பார்த்தாள். மகளை எரிச்சலாகவும், மற்றவளை எரிப்பது போலவும் மாறி மாறிப் பார்த்தாள். கலைவாணி, சந்திராவின் மோவாயைப் பிடித்தபடி, ஏதோ சொல்லப் போனாள். அதற்குள் ராசலட்சுமியம்மா, எக்காளமாகக் கேட்டாள். மகளைத்தான்.

‘இப்பல்லாம்... ஒன் கண்ணுக்கு நான் ஆகாமப் போயிட்டேன்... நானும் பார்த்துட்டுத்தான் இருக்கேன்...பத்து நாளாவே ஒன் பேச்சு, ஒரு மாதிரி தான் இருக்குது’

ராசலட்சுமி, மீண்டும் சமையலறைக்குள் போய்விட்டாள். தட்டுக்களும், தம்ளர்களும், ஒன்றோறொடன்றாய் சண்டை போடும் சத்தம். கரண்டியும் செம்புகளும் கராத்தே போடும் ஒசை... பேயோசை... பெருவோசை..

சமையலறைக்குள்கோபமாய்ப் போகப் போன சந்திராவை, கலைவாணி கீழே குதித்துப் பிடித்துக் கொண்டாள். ஒருத்திக்கு ஒருத்தி அனுதாபம் தெரிவிப்பது போல், சிறிதுநேரம் தலை குனிந்து நின்றார்கள். டாக்டரம்மாவின் தாய், கடந்த எட்டு நாட்களாகவே, கலைவாணியை சாடைமாடையாகத் திட்டுகிறாள்... மகள் வந்ததும் பெட்டிப் பாம்பாகிறாள். அவள் போனதும், வட்டியும் முதலுமாய் வாய்க்கு வந்தபடி, இவளுக்காக, தனக்குத்தானே பேசிக் கொள்வது போல் பேசுகிறாள். இது என்ன சத்திரமா சாவடியா... கரையான் புத்தெடுக்க கருநாகம் குடியேறிச்சாம்...'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/230&oldid=635675" இலிருந்து மீள்விக்கப்பட்டது