பக்கம்:பாலைப்புறா.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 பாலைப்புறா

இரண்டு பெண்களும் பம்பரமாய் இயங்கினார்கள். சந்திரா பெருக்கிய தரையை, கலைவாணி ஈரத்துணியால் துடைத்துவிட்டு, அந்தத் துணியை கசக்கிப் பிழிவதற்காக, வீட்டுக்குப் பின்பக்கமாய் உள்ள கிணற்றடிக்குப் போய்விட்டாள். சமையலறையில் உள்ள வாஷ் பேசினில் கை கழுவிக் கொண்டிருந்த சந்திரா, அழைப்பு மணி சத்தம் கேட்டு அம்மாவைப் பார்த்தாள். அவளோ, பதிலுக்கு ஒரு தகர டப்பாவை தலைகீழாய் கவிழ்த்து, தட்டினாள்... சந்திராதான், அந்த அறையில் இருந்து விடுபட்டு, இடுப்பில் செருகிய புடவை முனையை இழுத்துவிட்டு, அதைக் கால்வரைக்கும் பரப்பிவிட்டு கதவைத் திறந்தாள்.

“ஹாய் சங்கர்”

சந்திரா, சமையலறைப் பக்கமாய் திருட்டுத்தனமாய் ஒரு தினுசான பார்வையை வீசிவிட்டு, சங்கரன் தலையில் ஒரு குட்டு போட்டாள். பிறகு, அவன் கையில் இருந்த சூட்கேசை வாங்கி வைத்துக் கொண்டு, அந்த தாய் மாமா மகனும்தன்னை அப்படிக் குட்ட வேண்டும் என்பதுபோல்தலையைக் குனிந்தாள். ஆனால், அவனோ எந்தக் கையால் குட்ட வேண்டுமோ, அந்தக் கையின் பெருவிரலை ஆட்டினான். இப்போது அதில் பிளாஸ்டருக்குப் பதிலாய் ஒரு சின்னக் கட்டுப் போட்டிருந்தது. சந்திரா, பழைய கதையை மறந்து கேட்டாள்.

‘கையில் என்னத்தான்?’

‘என்ன இது.. தெரியாதது மாதிரி கேட்கறியே...? அதுதான் அதான் கலையோ கொலையோ...’

‘என்னத்தான் நீங்க. துருபைப் போய்துரணாய் ஆக்கிறிங்களே...” ‘துரும்பாய் இருந்தால்... இந்நேரம் ஆறி இருக்கணுமே’

‘நீரிழிவாய் இருந்தாலும் ஆறாது. இப்படிக் கட்டுப்போட்டு... காற்று போகாட்டாலும் ஆறாது. அப்படியே வந்திருந்தாலும், நிச்சயம் இது அவளாலயோ அதாலயோஆறாமல் இருக்காது”

‘பார்த்தியா... பார்த்தியா... நீயே... அப்படியே வந்தாலும் முன்னு இக்கன்னா போட்டு பேசுற பாரு...’

‘அய்யோ... ஒங்க கிட்டே ஒரு பேச்சுக்கு சொன்னேன். இப்பவும் டாக்டர் என்கிற முறையில் சொல்றேன். ஒங்களுக்கு அது வராது... வராது... வரவே வராது.. போதுமா?”

‘டாக்டருக்கு டாக்டரே... குழப்புறீங்க... மெட்ராஸ் நர்சிங் ஹோம் டாக்டர் நிச்சயமாய் வந்திருக்குமுன்னு சொல்றார்”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/232&oldid=635677" இலிருந்து மீள்விக்கப்பட்டது