பக்கம்:பாலைப்புறா.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 233

‘சரி... அசோகன் ஆஸ்பத்திரியிலே டெஸ்ட் செய்வோம்’

‘அய்யோ... அவனா... இதுதான் சமயமுன்னு, இருக்குன்னு சொல்வான். சரியான வில்லன்...’

‘இதுக்கே ஒங்களை நான் அடிக்கணும். சரி பரவாயில்ல... பேசாம மாவட்ட மருத்துவமனையில டெஸ்ட் செய்திடுவோமா...?”

‘'வேண்டாம்... எனக்குப் பயமா இருக்குது. நீ சொல்றதைப் பார்த்தால், ஒனக்கே சந்தேகம் வந்துட்டு. எனக்கும், இருந்தாலும் இருக்கலாமுன்னு சந்தேகம் வந்துட்டு...’

‘அய்யோ... கடவுளே... ஒங்களை நான் எப்படித்தான்காதலிச்சேனோ... சரி... எந்தப் பொண்ணும், அவள் உயிருக்கு உயிரான காதலியாய் இருந்தாலும், எந்த எய்ட்ஸ் நோயாளியையும் கட்டிக்கமாட்டாள். காரணம், கல்யாணம் என்கிறது சந்தோஷத்திற்காகவும், சந்தோஷப்படுத்தவும் செய்கிற ஏற்பாடு... ஆனாலும், நான் இப்போ ஒங்களுக்கு ‘ஹெச்.ஐ.வி. இல்லை என்கிறதை நிரூபிப்பதற்காவது, உடனடியாய் ஒங்களை கல்யாணம் செய்யத் தயார். இங்கேயே ரிஜிஸ்டர்மேரேஜ் செய்யலாமா... இல்லாட்டி... இன்னம் பதினைந்து நாளையிலே மெட்ராஸ்ல ஜாம் ஜாமுன்னு வச்சுக்கலாமா? எதுக்கும் நான் ரெடி... நீங்க ரெடியா...?”

சங்கரன், பேசாமல் நின்றபோது, அதுவரை சமையல் அறையில் அவர்கள் பேசுவதை முகம் சுழித்துக் கேட்டுக் கொண்டிருந்த ராசலட்சுமிக்கு மகிழ்ச்சி, வேகமாக நடந்துவந்தாள். அண்ணன் மகன் வழக்கம் போல் தன்னை சமையலறையில் வந்து, கைகளைப் பற்றிக் குசலம் விசாரிக்க வேண்டும் என்று நினைத்து அங்கே நின்ற அந்தம்மா, அப்புறம் வாசலுக்கு வந்து, இப்போது அவர்கள் பக்கமாய்ப் போய்விட்டாள். போனதும் போகாததுமாய், அண்ணன் மகனைப்பார்த்துக் கேட்டாள்.

‘சந்திரா சொல்றதுதான் சரி... ஆனால் திருட்டுத்தாலி கட்டுறது மாதிரி.. ரிஜிஸ்டர் தாலி வேண்டாம். எங்கண்ணாவுக்கு, இப்பவே லட்டர் போடுறேன். அடுத்த மாதம் வச்சிக்கலாம். மெட்ராஸ்லே எல்லாரும் சுகந்தானே...’

“சுகத்துக்கு என்ன... நல்ல சுகம்...”

‘கையில என்னது...’

‘நகச்சுத்தியாம்மா... கட்டே தேவையில்ல... எந்த டாக்டரோ, நர்சிங் ஹோம்ல நல்லா. இவரை ஏமாத்திட்டான்...”

‘சரி... ரூமுக்குள்ளே போய் பேசுங்களேன்..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/233&oldid=635678" இலிருந்து மீள்விக்கப்பட்டது