பக்கம்:பாலைப்புறா.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24 பாலைப்புறா

"வெள்ளையன்பட்டி பிரசவ மருத்துவமனை. அடிக்கல் நாட்டு விழா; நாள்-இன்றைக்கு நேரம்-மாலை மணி ஆறு, தலைமை மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் சுகுமார்; அடிக்கல் நாட்டுபவர் - எம்.எஸ்.நிச்சில், எம்முக்கும் எஸ்ஸுக்கும் இடையே புள்ளியோ கோடோ கிடையாது. பிராக்கட்டுல உலக வங்கி திட்ட மேற்பார்வையாளர், வரவேற்பு; எஸ்.கலைவாணி, முன்னிலை - திருவாளர்கள் ஆறுமுகம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர், சாமிநாத பாண்டியன், முன்னாள் கர்ணம், பால்பாண்டி, முன்னாள் மணியம், தமிழ்த்துரை- பள்ளி நிர்வாகி, சின்னத்துரை, டாக்டர் அம்பேத்கர் மன்றச் செயலர், சீமைச்சாமி, வர்த்தகர், வெள்ளைச்சாமி, ஒப்பந்தர், பிராக்கட்ல காண்டிராக்டர். நன்றியுரை ஆனந்தி... இன்ஷியல் இல்ல. இப்படிக்கு மகளிர் சுயவேலைக் குழு, மகளிர் நல மன்றம்,நேரு இளைஞர் மையம் மற்றும் அறிவொளி இயக்கத்தின் கூட்டுச்செயற்குழு. அய்யோ முன்னிலையில் மூன்று பெயரை விட்டுட்டே, படிக்கட்டுமா?”

மீரா, படித்து முடித்து விட்டு, எல்லோரையும் பார்த்தாள்.

ஆனந்தி, ஒப்பாரி மாதிரி பேசினாள்.

‘'வேணுமுன்னா பாருங்க... பெயருக்கு முன்னால சாதிப்பேர ஏன் போடலன்னு பாதிப்பேர் சண்டைக்கு வருவாங்க. முந்தா நாளே, கலை கிட்டே கத்துனேன். கேட்கல... இந்த முன்னிலை பட்டியல் வாக்காளர் பட்டியல் மாதிரி நீண்டிருக்கும்போது, என் பெயரை எப்படி விடலாமுன்னு ஒவ்வொருத்தனும் குதிக்கப் போறான்... விழா நடந்தாப்போலதான்... ஆஸ்பத்திரி வந்தாப் போலதான்"

வாடாப்பூ குறுக்கிட்டாள்.

“சும்மா இருக்கறவங்களையும், நீயே தூண்டிவிடுவே, போலுக்கே.. இவங்க மேல ஆசயிலயா போட்டோம்? அத்தனையும் அற்பம். இடக்கு மடக்குவாய் எதாவது செய்திடப்படாதேன்னு பயம். அதனாலதான் பெயரை போட்டோம். கலைவாணி மேலே என்ன தப்பு?”

கலைவாணிக்கு, ஆனந்தியின் சந்தேகமோ, தேனம்மாவின் குறுக்குக் கேள்வியோ காதுகளில் விழவில்லை. மீரா, படிக்கப்படிக்கப்பூரித்து, படித்து முடித்த பிறகு, அந்த பூரிப்பிலேயே மூழ்கிக் கிடந்தாள். நினைவுகள் பின்னோக்கியும், எதிர் பார்ப்புக்கள் முன்னோக்கியும் போயின. போனவருடம் கல்லூரி படிப்பு முடிந்ததும், ஊருக்கு வந்து, நேரு இளைஞர் மன்றத்தின் சுற்றுப்புறக் கிராமங்களுக்கு அமைப்பாளராகி, பல்வேறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/24&oldid=1404953" இலிருந்து மீள்விக்கப்பட்டது