பக்கம்:பாலைப்புறா.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 பாலைப்புறா

வார்டும் நல்லசந்தர்ப்பம். காத்திருக்க முடியாது. அதற்குள்இவர்கள் இறந்து போவார்கள்... எப்படி பேச்சைத்துவக்குவது... ஆமாம்... இப்படித்தான்!

“என்ன அசோகன்... நீங்களும்... இந்த அப்பாவிகளை... இப்படி தனிப்படுத்தி வச்சால் எப்படி... மெயின் பில்டிங்ல வைக்காமல், இப்படி ஒதுக்குப்புறமாப் போட்டால் எப்படி...? ஐ ஃபீல் பேட்...”

‘நான் இவங்களை ஒதுக்கல டாக்டர். இவங்க கிட்டே இருந்து சராசரி மனிதர்களை ஒதுக்கி வைக்கேன். அவங்களோட தீ நாக்குகள் சுடாமல் இருக்கிற இடமாய் பார்த்து வைத்திருக்கேன். இவங்களை மெயின் பில்டிங்ல வைத்தால்... அங்கே இருக்கிற சராசரி நோயாளிகள்... இவங்களாலதான்... தங்களுக்கு நோய் குணமாகலன்னு நினைப்பாங்க... பார்வையாளர்களும், எங்கேயோ வாங்குகிற எய்ட்சுக்கு இவங்களே காரணமுன்னு நினைக்கலாம். அதோட இந்த நோயாளிகள் எல்லோரையும் ஒரு நாள்விட்டு, ஒரு நாள் குளிப்பாட்டுறோம்... இங்கேதான் அதுக்கு வசதி இருக்குது’

‘நீங்க... ரொம்ப கிரேட் அசோக்...’

‘இப்போ இல்ல... என்றைக்கு அந்த நோயாளிகளோட ஆயுளை அவஸ்தப்படாமல் நீட்டிக்க முடியுமோ... அப்போ நான் கிரேட்தான்... வெளிநாடுகளில் பணக்கார எய்ட்ஸ் நோயாளிகளோட ஆயுளை மூன்று வருடம் நீட்டிக்க வைப்பதற்கு அசிடோதைமிடின் என்ற மருந்து இருக்குது. இங்கே இதை ஒரு நோயாளிக்கும் கொடுக்க வருடத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் செலவாகும்... எப்படி முடியும்...’

‘ஏன் அசோகன்... இப்படி செய்தால் என்ன...”

“எப்படி?”

‘இவங்களை பற்றி குளிப்பாட்டுறதில இருந்து சிகிச்சை அளிப்பது வரைக்கும், ஒரு வீடியோ டாகுமெண்டரி எடுத்து... கூடவே, ஒங்க பேட்டியையும் சேர்த்து படமாக்கி, நான் போகிற வெளிநாட்டுக் கான்பரன்ஸ்ல காட்டினால், தமிழ்நாட்டின் பெருமையும் உயரும். கூடவே இந்த மருந்து கூட கிடைக்கலாம்... இரண்டு பேருக்கு கிடைத்தால் கூட நல்லதுதானே... டாலரா வாங்கப்படாது. நீங்க சொன்னிங்களே... மருந்து என்ன பேரு அது...? எனக்கும் தெரியும்... ஆனால் சட்டுன்னு ஞாபகத்துக்கு வர்லே...’

‘அலிடோ... தைமிடின்...’

‘கரெக்ட்... அதுதான்... அப்போ நாளைக்கே வீடியோ காமிராவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/244&oldid=635690" இலிருந்து மீள்விக்கப்பட்டது