பக்கம்:பாலைப்புறா.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் - 245

அனுப்பி வைக்கட்டுமா...? இந்த நோயாளிகளில் ஒருத்தரோ. ரெண்டு பேரோ பேசட்டும்’

‘எனக்கு இந்த வீடியோ... ஆடியோ எல்லாம் பிடிக்காது டாக்டர்... நான் மண்ணுக்குள்ளே மறைந்த வேராவே இருக்க விரும்புகிறேன். நம்மோட பிரச்சாரமும், விழிப்புணர்வும் இதுவரைக்கும் எய்ட்லோட வெற்றியாய் இருக்குதே... தவிர, எய்ட்ஸ் நோயாளியோட வெற்றியாய் ஆகல... விழிப்புணர்வு இயக்கம்... அதை நடத்துகிறவர்களோட வெற்றியாய் ஆகிறதே தவிர... அதன் நோக்கத்தோட வெற்றியாய் ஆகல. இன்னும் சொல்லப் போனால் தோல்வியாவே முடியுது...’

‘இது இந்தியாவுல மட்டுந்தான் அசோக்... மேற்கு நாடுகளில் இது மாதிரி இல்லை அப்போ... வீடியோ காமிராவை... நீங்க பேட்டி கொடுக்காமல் எப்படி அசோக்? வாட் நான்சென்ஸ் யுஆர் டாக்கிங்’

‘நான் பேட்டி கொடுத்தால்... அது கோட்டியாய் முடிஞ்சுடும்... நீங்களே பேட்டி கொடுங்க... பேட்டி எடுங்க... மானேஜர் கிட்டே சொல்லிடுறேன்”

‘இவங்க கிட்டே நீங்களே”

‘எனக்கு... கூச்சமாஇருக்குது... வீடு பற்றி எரியும் போது, இவங்ககிட்ட கேட்கிறது... பீடிக்கு நெருப்பு கேட்கிறது மாதிரி... மானேஜர் பார்த்துக்கு வார்... அந்த அலிடோதைமிடின் மருந்துக்காகத்தான் டாக்டர்... நான் சம்மதிக்கேன், ஆனாலும் இதுவே பஸ்ட் அன்ட் லாஸ்ட்...’

‘ஒகே... ஒகே... ஒன்லி ஒன்ஸ்... ஆனால் எஃபக்ட் பிரமாதமாய் இருக்கும். சரிபோவோமா? மாவட்டகலெக்டரோடஒரு அப்பாயின்மென்ட் இருக்குது’

‘அவருக்கும் எய்ட்ஸா...’

‘நாட்டிபாய்... குறும்புக்கார டாக்டரப்பா’

அசோகனும் சுமதியும், அந்த வார்டில் இருந்து வெளிப்பட்டார்கள். அங்கிருந்த நோயாளிகள், அவனை ரட்சகன்போல் பார்த்து, கண்களால் விடை கொடுத்தார்கள். டாக்டர் சுமதி, அப்படியே தனது மாருதி காரில் ஏறி இருப்பாள். ஆனால், டம்பப்பையை அசோகன் மேஜையில் வைத்திருந்தாள். அதை எடுப்பதற்காக அசோகனது அறைக்குள் வந்தால், உள்ளே இந்த உதவாக்கரை டாக்டர் சந்திரா. இவள் யார்... “சிடுமூஞ்சி...”

அசோகன், அவர்களைப் பார்த்து திகைத்தான். பிறகு சந்திராவைப் பார்த்து, ‘என்ன இப்படி திடுதிப்புன்னு’ என்றான். சந்திரா படபடப்பாகப் பதிலளித்தாள். டாக்டர்சுமதியை அங்கீகரிக்காமலே கேட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/245&oldid=635691" இலிருந்து மீள்விக்கப்பட்டது