பக்கம்:பாலைப்புறா.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 பாலைப்புறா

‘ஒங்ககிட்ட நாங்கதனியா பேசணும் அசோக்”

டாக்டர் அசோகனுக்கு, எதுவும் புரியவில்லை... பெயர் சுருக்கம் பற்றி சந்தோஷப்பட்டதாகவோ, அல்லது கவலைப்பட்டதாகவோ தோன்ற வில்லை. ஆனால், டாக்டர் சுமதிக்கு சுருக்கென்றது. அதெப்படி அசோக்” என்று, தான் உச்சரிப்பதை இந்த ஆரோகன்ட் சந்திராஉச்சரிக்கலாம்... நான் இல்லாமல் இவளுக்கு அசோக்கிட்டே என்ன ரகசியம்... கூட இருக்கிற இந்த உம்மணாம் மூஞ்சி யாரு..?”

டாக்டர்சுமதி பதிலடியாய்ப் பேசினாள்.

‘'சரி... அசோக்... நான் வாரேன்... எனக்கு ஒரு மணி நேரத்துக்கு அதிகமாய் கம்பெனிகொடுத்ததுக்கு நன்றி...”

‘இப்போக் கூட நீங்களாத்தான் போlங்க”

‘இருப்பேன். ஆனால் இந்தம்மா...துடிக்காங்களே”

“ஆமா... டாக்டர்... நான் இவர்கிட்டே தனியா பேசணும். ஒருத்தர் கொடுக்கிற ரூபாயை எண்ணிப் பார்க்கிறோமுன்னா, அவரை நம்பாம இல்ல... இது மாதிரி, இவர்கிட்டே தனியா பேசணும் என்கிறது ஒங்களைஇன்சல்ட் செய்யறதாய் இல்லை!”

“யாரும்... என்னை இன்சல்ட் செய்ய முடியாது... சரி...சரி... வெட்டிப் பேச்சு எதுக்கு? நான்வாறேன்... அசோக்’

‘சுமதி... பை தி பை... இவங்கதான்...நான் முன்னால சொன்னேன் பாருங்க. கலைவாணி அந்தப் பொண்ணு...’

‘ஒ... மைகாட்! நீதான்.அந்தக் கலைவாணியா? அசோக், ஒன்னைப் பற்றி சொன்ன ஒரு நாள் முழுக்க நான் சாப்பிடல்லம்மா... கடவுள் ஒன்னைக் காப்பாற்றுவார். கவலைப்படாதம்மா... நானும் ஒனக்கு என்னாலான வகையில் உதவுவேன்... அப்போஅசோக் போய் வரட்டுமா? கலைவாணி. வாறேம்மா... எந்தப் பிரச்சினைன்னாலும் என்கிட்ட வா. வேணுமுன்னா, ஒரு வேலை போட்டுக் கொடுக்கேன்.”

டாக்டர் சுமதி ஒய்யாரமாய் நடந்து, சந்திராவை அலட்சியப்படுத்திய சந்தோஷத்தோடு போய்விட்டாள். சந்திரா, அசோகனை கடித்துத் தின்னப் போவது போல் பார்த்தாள். அவனோ, சுமதி பேச்சைக் கூட காதில் வாங்காமலும், அவளைக் கண்ணால் பார்க்காமலும், குன்றிக் கிடந்த கலைவாணியையே பார்த்தான். சந்திரா.ஆத்திரமாய்க் கேட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/246&oldid=635692" இலிருந்து மீள்விக்கப்பட்டது