பக்கம்:பாலைப்புறா.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 247

‘ஏன் வந்தீங்கன்னு கேட்க.. மாட்டிங்களா?”

‘அப்படிக் கேட்பது.. அவசரக் குடுக்கைத்தனம். ஒங்க இரண்டு பேரையும் எப்போதுமே ஏன் வரலன்னுதான் கேட்பேன். ஏதோ விபரீதம் நடந்திருக்குது...’

“ஆமா... அசோக்!”

சந்திரா, கலைவாணியின் தோளில் கை போட்டபடியே, நடந்தது அனைத்தையும் ஒன்று விடாமல் ஒப்பித்தாள். அம்மாவையும், மாமா மகனையும் எக்கேடும் கெடும்படி வீட்டுலேயே விட்டுவிட்டு, கலைவாணி யைத் தேடி காடு மேடாய் அலைந்ததை விவரித்தாள். கலைவாணியை மீட்டியச்சூழலை அவள் சொன்னபோது, அசோகன் அதிர்ச்சியோடு எழுந்து விட்டான். கலைவாணியின் தலையில் கை போட்டபடியே, கேட்டான்.

‘என்ன கலையம்மா...ஒன்னை மாதிரி புத்திசாலிப் பெண்கள் செய்கிற காரியமா இது? பேசாமல், இங்கே வர வேண்டியது தானே ஒ. மை காட்! அந்த லாரிலமட்டும் நீஏறி இருந்தால், அப்புறம் ராத்திரிதோறும் ரோட்டுலே புளிய மரப் பக்கத்திலயும், புதருக்கு உள்ளயும், இரவு மோகினியாய் நிற்க வேண்டியது வந்திருக்குமே... லாரி லாரியா ஏறி... புதர் புதராய். இறங்க வேண்டியது இருக்குமே! என்ன கலையம்மா...! இப்படி முட்டாத் தனமாய்...’

கலைவாணிக்கு, அப்போதுதான் அந்த லாரியின்தாத்பரியமே புரிந்தது... புரியப் புரிய, அசோகனை மேல் நோக்கிப் பார்த்துவிட்டு, கீழ் நோக்கித் தலைபோட்டாள். சந்திரா.அவசரப்பட்டாள்.

‘அந்தம்மாரயிலேறிடப்படாது’

‘எந்தம்மா...?”

“எங்கம்மாதான்... நான் வீட்டைவிட்டுப்புறப்பட்டு மூன்று மணிக்கும் மேலாகுது.. ரயிலுக்கு இன்னும் நேரம் இருக்குது. நல்லவேளையா’

‘அந்த மென்டல் சங்கர், அத்தைக்காரியை பஸ்ல கூட்டிட்டுப் போயிருந்தால்...”

‘பயமுறுத்தாதீங்க... அசோக்... சங்கரன் எக்கேடும் கெடட்டும்... ஆனால் அம்மா போயிடப்படாது. கலைவாணியை இந்தப்பாடுபடுத்தின பிறகு, அவர்களை அம்மான்னு நான் நினைக்கறதே அசிங்கம். ஆனாலும் மனசு கேட்கமாட்டேங்குது. அவங்களுக்கும், போக்கிடம் கிடையாது. திருச்சியில் பெரியண்ணன் வீட்ல இருந்தாங்க. பேரப்பிள்ளைகளே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/247&oldid=635693" இலிருந்து மீள்விக்கப்பட்டது