பக்கம்:பாலைப்புறா.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 பாலைப்புறா

துரத்திட்டு... கோவையிலே சின்னண்ணன் வீட்டுக்குப் போனாங்க. அப்பாவியான அக்கா புருஷன் இங்கே வந்து... ‘ஒங்க அம்மாவை நீயே வச்சிக்கோன்னு கொண்டு வந்து விட்டுட்டுப் போயிட்டார். அந்த அளவுக்கு எங்கம்மாபிரசித்தம்... முன்னால இப்படிக் கோவித்து... என்கிட்டே இருந்து போனபோது ஏற்பட்ட அனுபவத்தை எங்கம்மா மறந்துட்டாங்க... ஆனால் என்னால மறக்க முடியல’

‘ஒங்களோட நிலைமை எனக்குப் புரியுது... முன் கூட்டியே சொல்லியிருந்தால், கலையை கூட்டிட்டுப் போக வேண்டாமுன்னு நானே சொல்லி இருப்பேன். பரவாயில்ல... கலை இனிமேல் இங்கேயே இருக்கட்டும்’

கலைவாணி குனிந்த தலை நிமிராமல், கனத்த குரலில் உரத்துச் சொன்னாள்.

‘ஒங்களுக்கும்...நான் பாரமாய் இருக்கவிரும்பல, டாக்டரய்யா... அப்போ போனாங்களே... அவங்க ஏதோ வேலை போட்டு கொடுக்கிறதாய் சொன்னாங்களே’

‘அதுவும் சரிதான்... இந்த இடத்தைவிட, அந்த இடம் பெட்டர்... அந்தம்மா.. எய்ட்ஸ் விழிப்புணர்வு இயக்கம் நடத்துறாங்க... அடிக்கடி வெளிநாடு போறாங்க... செய்தியாளர்கூட்டத்தை நடத்துறவங்க... ஒன்னால அவங்களுக்கும் உதவியாய் இருக்க முடியும். இனிமேல், நீதான் அந்தம்மாவுக்கு பி.ஆர்.ஒ... பொதுமக்கள் தொடர்பு அதிகாரி...”

டெலிபோன் எண்ணகளை சுற்றப் போன அசோகனை, சந்திரா கண்களால் மறிக்கப் பார்த்தாள்... அந்த பட்டுச்சேலை டாக்டர் சுமதியா... அவள் அந்த லாரிக்காரனைவிட மோசமானவள்... என்று சுடசுடச்சொல்லப் போனாள். பிறகு, சுழலப் போன நாக்கை சுருட்டிவைத்துக் கொண்டாள்.

‘இவளைவைத்துக் காப்பாற்ற முடியாத எனக்கு, அப்படி சொல்ல என்ன யோக்கியதை இருக்குது...?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/248&oldid=635694" இலிருந்து மீள்விக்கப்பட்டது