பக்கம்:பாலைப்புறா.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

249

iெங்குமே இருள்மயம்...

அந்தக் கடலையும், கடல் முனையான கடற்கரைத் திட்டையும் இருள் ஆக்கிரமித்திருந்தது. கடலும் வானமும் ஒன்றானது போன்ற தோற்ற மாயை. கடல் மேலே ஏறுவது போலவும், ஆகாயம் கீழே இறங்கிப் போனது போலவுமான அர்த்த ராத்திரி. தொலைவில் உள்ள சாலையில், மாநகராட்சி விளக்குகள் கண்களை மூடிக் கொண்டன. கடலுக்குள்ளும், படகின் விளக்கோ அல்லது கப்பலின் ஒளியோ இல்லாத சூன்ய நேரம்... கடல் சாட்சியோடு, இருளின் பேயாட்சி. மெளனத்தின் கொடுங்கோல்...

அந்தக் கடல் நுனியில், ஈரமண்ணில் மனோகரும், அன்புமணி, எஸ்தர் உள்ளிட்ட அவன் தோஸ்துக்களும், மாட்டின் பிடறி போன்ற மண்சரிவில், சாய்ந்து கிடந்தார்கள். சிறிது நேரத்தில்... எஸ்தர் மட்டும் எழுந்து, மனோகரின் முன்னால் வந்து, அவன் கால் மேல், தனது கால்களைப் போட்டுக் கொண்டு, அவன்கழுத்தைத் தடவி விட்டாள். காவல்துறையினர், அந்தக் கழுத்துப் பக்கத்தில்தான் பூட்ஸ் கால்களால் அழுத்தினார்கள். அதுவரை முதுகில் லத்திக் கம்புகளையும், முகத்தைக் குத்திய கம்பு முனைகளையும் பல்லைக் கடித்துத்தாங்கிக் கொண்ட மனோகர், அப்போது கதறப் போனான். சத்தம் போட்டு அழ முடியாமல், கண்களில் இருந்து உப்பு நீரும், வாயில் இருந்து எச்சில் நீரும் தரையில் ஒன்றாய்க் கலவையாயின. கடைசியில், இந்த எஸ்தர்தான், அந்த சப்இன்ஸ்பெக்டரையும், கான்ஸ்டபிளையும் கையெடுத்துக் கும்பிட்டாள். ‘யானைக்கிட்ட போன கரும்பும், போலீஸ் கிட்டே போன பொருளும், திரும்பாது என்கிறது. தெரியாதவன், சார்... இனிமேல்... என் பணம் என்னாச்சின்னு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/249&oldid=635695" இலிருந்து மீள்விக்கப்பட்டது