பக்கம்:பாலைப்புறா.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 பாலைப்புறா

கேட்கமாட்டான் சார் என்று மன்றாடினாள். அப்படியும், லத்திக் கம்புகள் மீண்டும் ஒங்கப்பட்டபோது, எஸ்தர், ஒருத்தரின் கையைப் பற்றிக் கொண்டு, பெருவிரலை அழுத்தியபடியே சிரித்தாள். சிரிப்பைக்கவசமாக்கி, கண்களில் கிறக்கம் ஏற்றிப் பார்த்தாள். அந்த போலீசாரை கண்களால் கைது செய்து, லத்திக் கம்புகளை கீழே போட வைத்தாள்... அவர்களோ, அப்போதே இரவு வரக் கூடாதா என்று ஏங்கி ஏங்கி, மனோகர் மேல் போட்ட பிடியை விட்டார்கள். அந்தப் பிடியை, எஸ்தர்மேல், அழுத்தம் குறைத்து, கோபம் தணித்துப் போட்டார்கள். பிறகு பகலாய் இருந்தாலும் பரவாயில்லை என்பதுபோல் அவளை இழுத்துக் கொண்டு பின்பக்கமாய்ப் போனார்கள்.

கடற்கரையில், புண்ணை ஊதிக் கொண்டிருந்த மனோகர், இதை நினைப்பதற்கே பயந்தான்.

காவலாளர் கொடுத்த கைப்புண்ணையும், கால் புண்ணையும், மனோகர் ஊதியபோது, எஸ்தர் ஈரக் கடல் மண்ணைப் பிசைந்தபடியே அவனைத் தேற்றினாள்.

“தானாய் ஆறிடுண்டா... உப்புக் காற்றுலே சரியாயிடும்... வாய்க்கு ஏன் வேலை கொடுக்கிற...”

‘பாவிப்பயங்க. சாவடியாய் அடிச்சதும் இல்லாமல், சூட்கேசையும் அதுக்குள்ள இருந்த ஆயிரக்கணக்கான ரூபாயையும் அமுக்கிட்டாங்களே... வெட்ட வெளியே, வீடாய் போயிட்டே...’

‘புலம்பாதேடா... மனோ... ஒன்னை இந்தப் பாடு படுத்தின அவனுக ரெண்டு பேருக்கும் எய்ட்ஸ் கொடுத்திட்டேன் பாரு... வேணுமுன்னே திட்டம் போட்டுத்தான். அவங்க இழுத்த இழுப்புக்குசாய்ந்து. ஒரேடியாய் இழுத்துச்சாய்ச்சுட்டேன்...’

‘இப்போஅதனால... நமக்கு என்ன லாபம்?”

‘இப்படி லாப நட்டம் கணக்கு போடாதே அன்புமணி. ஒனக்கென்ன? என்ன சாலக்கு செய்தியோ... மறுநாளே, போலீஸ் ஒன்னை விட்டுட்டு. ஆனால் இந்த மனோகரைப்படுத்தினபாடு இருக்கே...”

‘ஏய்... எஸ்தரு.. ஒனக்கு.. அவன் அடிப்பட்டதுதான் பெரிசா தெரியுதோ... அப்போ... நான் ...இந்த சசி. சேகர்... என்ன பாடு பட்டோம் தெரியுமா... எங்களை என்ன அந்த நாயிங்க... சந்தனம் பூசித்தடவு னாங்களா...’

‘கோவிச்சிக்காதடா... மச்சி. மனோவுக்கு அடிபட்டு பழக்கமில்ல... பாரு.. அதனால சொன்னேன்... பாவம்... ஒங்களையும் ரொம்பத்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/250&oldid=635697" இலிருந்து மீள்விக்கப்பட்டது