பக்கம்:பாலைப்புறா.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 251

அடிச்சிட்டான்’

எஸ்தர், நகர்ந்து நகர்ந்து,... நித்தியகுமார், முன்னால் போய், கால்களை மடித்துப் போட்டு உட்கார்ந்தாள். அவன் விரல்களுக்கு சொடக்கு விட்டாள். அன்புமணி சட்டையில் அப்பிய மண்துகள்களைதட்டியபடியே கேட்டான்.

‘மனோ... எதாவது காசு இருக்காடா... ஊசி போடாட்டா... உயிரே போயிடும் போலுக்கு... சாதாரண ஊசியாவே போட்டுக்கலாம்... மில்லி பத்து ரூபாய்தான்...’

எஸ்தர், நித்தியகுமாரிடம் இருந்து விடுபட்டு எழுந்தாள். கால்களையும் கைகளையும் உதறிவிட்டுக் கொண்டாள். அங்குமிங்குமாய்ச் சுற்றினாள். பின்னர் அந்தச் சாக்கில், மனோகரின் அருகே உட்கார்ந்தாள். அவன் காதில் மெல்லக் கிசுகிசுத்தாள். ‘மனோ... என்கிட்டே இருக்கிற ஒன்னோட ஆயிரம் பற்றி சொல்லிடாதடா... இந்த துஷ்டப்பய இன்னிக்கே காலி செய் திடுவான். நீயும், நானும் இருக்கிறதுக்காக... ஒரு குடிசைபார்த்திருக்கேன்... அதுக்கு தேவைடா...’ என்றாள். மனோகர் மனம் ஆடியது. அவனுக்கும் பட்டையும், கஞ்சாவும் அலுத்துவிட்டன. அந்த சொர்க்க லோகத்திற்கு, ஊசி வழியாய்ப் போக வேண்டும். அங்கேதான் அவனுக்கு எய்ட்ஸ் கிடையாது. கலைவாணியோடு கைகோர்த்து அங்கேதான் வாழ முடியும்... அங்கேதான் குடியரசுத் தலைவர், அவனுக்கு விருது வழங்குவார்.

மனோகர், எஸ்தர் சொன்னதையும் மீறி, அவளிடம் கேட்கப் போனான். அவளும், போதைப் பைத்தியத்தையும் முறியடித்துதான் அப்படிச் சொன்னாள் என்பது இவனுக்குத் தெரியும். ஆனாலும் மனம் பொறுத்தால், உடல் பொறுக்கவில்லை. உடல் பொறுத்தால், மனம் கேட்கவில்லை... “எஸ்தர் என்று சொல்வதற்காக, அவன் நாக்கு முனை மேல் பல்லின் அடிவாரத்தை தொட்டபோது, அன்புமணி இவனை சுதாரிக்க வைத்து விட்டான். மனோகரிடம் பணம் இல்லை என்று அனுமானித்து, இன்னொன்றைக் கிளப்பப் போனான்.

‘அப்புறண்டா... நீ பேங்க் லாக்கர்லே தங்க நகைகளை வைத்திருக் கியாம். போலீஸ்காரங்க... பேங்க்புக்கை... ஒன்கிட்ட தெரியாத்தனமாய் கொடுத்திட்டாங்களாம்”

“ஆமா... அதுக்கென்ன இப்போ...?”

‘இன்னும் அப்பாவியாவே இருக்கியேடா... மனோ... அந்த நகைகளை எடுத்து, போலீஸ்ல கொடுத்திடணுமாம். இல்லாட்டி, கஞ்சா கேஸ்லே புக் பண்ணி, ஒரு வருஷம் உள்ளே போட்டுடுவாங்களாம். தேவைப்பட்டால், தடாவோ கிடாவோ அதை விட்டு... அடிப்பாங்களாம்... சப் இன்ஸ்பெக்டர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/251&oldid=635698" இலிருந்து மீள்விக்கப்பட்டது