பக்கம்:பாலைப்புறா.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 பாலைப்புறா

கண்டிப்பாய் சொல்லிட்டார்.”

‘அன்புமணி, நீ எப்போசப்-இன்ஸ்பெக்டர்ஆனே?”

அன்புமணி, வெடுக்கென்று கேட்ட எஸ்தரை அடித்திருப்பான். ஆனாலும் அவள் திருப்பிக் கொடுக்கிறவள்... இந்த எஸ்தர் இல்லாத சமயமாய் பார்த்து, மனோகர்கிடைத்துவிட்டால், அவனைலாக்கரில் மாட்டி விடலாம்...

அன்புமணி சமாளித்தான்.

‘என்ன எஸ்தரு... நாம் நேற்றோ... இன்னிக்கோவா பழகுறோம்? ஒன்னை எப்போ வேலூர் பெங்களுர் ரோட்டுல பைக்கில் பிக்கப் செய்தேனோ... அதுல இருந்தே, நாம் ஒண்ணாப் பழகுறோம்... ஒண்ணா... படுக்கிறோம்... ஒண்ணா சாப்பிடுறோம்... நீ என்னை புரிஞ்சிருப்பேன்னு நினைத்தேன்...’

எஸ்தர் பதில் பேசாத போது, மனோகர் திட்டவட்டமாக தீர்க்கமான குரலில் பேசினான்.

‘அன்பு! நீ கேட்டாலும் சரி, அந்த சப்-இன்ஸ்பெக்டர் கேட்டாலும் சரி...லாக்கர்ல இருக்கிற நகை, என் ஒய்ப் கலைவாணியோட நகைங்க. எனக்கு சொந்தமில்லாத பொருளுங்க... கழுத்த நெரிச்சாலும் சரி, சுவரோட சேர்த்து... விலங்குல போட்டாலும் சரி... ஐஸ் கட்டில படுக்க வச்சாலும் சரி, என் கலைவாணிநகையிலே ஒரு கிராம் கூட கொடுக்கமாட்டேன்...”

“எவன்டா... இவன்... ஒன்னை...நான் கொடுன்னா... சொன்னேன்? நீ கொடுக்கப் போனாலும், தடுக்கிறவன்டா... இந்த அன்பு, தர்மத்துக்காக தலையைக் கொடுக்கிறவன்டா...’

‘அதான்... போலீஸ்லே எங்களை விட்டுட்டு, மறுநாளேநீ.பிச்சிட்டுப் போனியோ...’

‘மூள இருக்காடா... சேகர்... நான் வெளில போய், பிடிக்க வேண்டிய ஆட்களை பிடிக்காட்டால், இந்நேரம் ஜெயிலுல இருப்பீங்க. போலீஸ்லே எப்.ஐ.ஆர். போடாமல் பார்த்துக்கிட்டவன் நான். நான் மட்டும் எனக்கு தெரிஞ்ச ‘பெரிசுகளோட கையை காலை பிடிக்கலன்னா... மனோகருக்கு.. செமத்தையா கொடுத்து அவனே லாக்கர் நகையை எடுத்து... போலீஸ்க்கு கொடுக்க வேண்டியது வந்து இருக்கும். நன்றியோட இருங்கடா... இல்லாட்டி... போய்கிட்டே இருப்பேன்...’

“எங்களை விட்டு ஒடிப் போக முடியுமா...’ ‘பேசுறதையும் பேசிட்டு... பாடுறான் பாரு பாட்டு, ...அடித்த இடத்தில

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/252&oldid=635699" இலிருந்து மீள்விக்கப்பட்டது