பக்கம்:பாலைப்புறா.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 253

அடித்தவனே ஒத்தடம் கொடுத்தது மாதிரி...!”

இதற்குள், இருட்டோடு இருட்டாய், வடதிசையிலும் தென்திசையிலும்

சுற்றிக் கொண்டிருந்த சசிகுமாரும், இன்னொருவனும் அங்கே

வந்துவிட்டார்கள். அன்புமணி, கைகால் உதறக் கேட்டான்.

‘எவ்வளவுடா தேறிச்சு...”

“கஞ்சப் பயல்கடா... முன்கூட்டியே காசு கேட்டால்... முடியட்டும் என்கிறான். முடிந்த பிறகு கேட்டால், நீதான் தரணுமுன்னு அடிக்கிறான். இந்தக் கடற்கரையே ரெளடி மயமாயிட்டு...’

‘டேய்...அதோபாருடா நாயிங்கமாதிரி’

அங்கிருந்த ஒவ்வொருத்தரும், எதிரே சன்ன்ஞ் சன்னமாய் பெருத்துக் கொண்டிருந்த நிழல் உருவங்களை, கீழே கிடந்தபடி பார்த்தார்கள். ஒடித் தப்பலாமா என்பது போல் எழுந்தார்கள். அன்புமணி, அம்போவாய்க் கிடந்த மனோகரை, ஆற்றொண்ணா அன்புப் பெருக்கோடு தூக்கி விட்டான். அதற்குள், இவர்கள் ஒடிவிடக் கூடாது என்பது போல் எதிர்திசைக்காரர்கள், அங்குமிங்குமாய் சிதறி, வட்ட வியூகம் போட்டபடி நடந்து, இவர்கள்அருகே வந்ததும் ஒன்றானார்கள்... சிறிது குள்ளமானவன், பெண்ணாகச் சந்தேகிக்கப்பட்ட எஸ்தரை தனிப்படுத்திக் கேட்டான்.

‘இந்தப் பசங்ககிட்டே என்னமே வேல ஒனக்கு?”

‘'வேலை. இல்லாமப் போனதாலதான்... பேசிட்டு இருக்கேன்... ஏதாவது வேலை இருந்தாதாயேன்...’

‘சரி வா...’

‘ஆனால் ஒண்ணு... காண்டோம் போடப்படாது... எனக்கு பிடிக்காது...’

“எங்களுக்கும் பிடிக்காது... யாராவது கிடைத்தால், முழுசாத்தான் பிடிப்போம்”

“அப்படியான்னாநான் எவ்வளவு ரூபாய்க்கு பெறுவேன்!”

‘நல்லாத்தான் பேசுறே... வாமே... அதான் ஐம்பதுன்னு ஒரு ரேட்டு இருக்குதே... விலைவாசி கூடிட்டுன்னு யோசிக்கிறியா?”

எஸ்தர், சகாக்களைப் பார்த்தாள். அவர்கள் திருப்தியுடன் கீழே உட்கார்ந்த போது, மனோகர் மட்டும் உட்காரமலே நின்றான். உடனே எஸ்தரும், ‘துணைக்குவா மனோ...’ என்று இவனைப் பிடித்து இழுத்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/253&oldid=635700" இலிருந்து மீள்விக்கப்பட்டது