பக்கம்:பாலைப்புறா.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 பாலைப்புறா

கூப்பிட்ட மூவரும் முன்னால் போனபோது, அவர்கள் பின்னால் நடந்த எஸ்தர், மனோகரின் காதில் கிசுகிசுத்தாள்...

‘இவங்க... பேட்டை ரெளடிங்க மாதிரி... கடற்கரை ரெளடிங்க... பொல்லாத போக்கிரிங்க... கற்பழிக்கறதுக்கின்னு சுத்துறவங்க... போராட முடியாது. அதோட... இவங்க, நமக்கு... பாதுகாப்பாகூட இருப்பாங்க...’

‘இந்த அசிங்கத்தைப் பார்க்கவாஎன்னை வரச்சொல்றே...?”

‘இல்லடா கண்ணு... நீ அங்கே இருந்தால் அன்புமணி... ஒன்னை மயக்கிடுவான்... நான் வரும் முன்னாலயே ஒன்னைக் கூட்டிக்கிட்டு போயிடுவான். ஒன்னோட லாக்கர் நகையை கைப்பற்றுவது வரைக்கும் அவன்துங்கமாட்டான். தயவு செய்து கொடுத்திடாதடா...’

‘அதைவிட உயிரைக் கொடுப்பேன்”

முன்னால் போனவர்கள், எஸ்தர் தங்கள் பின்னால் வந்துதான் ஆகவேண்டும் என்பது போல் திரும்பிப் பார்க்காமலேயே நடந்தார்கள். ஆனாலும், ஒரு படகு பக்கம் வந்ததும் அப்படியே நின்றார்கள். அவர்களுக்கும், வெட்கம் இருந்தது. ஒருத்தன் மட்டுமே, அவளைப் படகிற்கு மறுபக்கம் இழுத்துக் கொண்டு போனான்.

இருளின் இருளான இருள்காடு... அலைகள் அழுகின்றன. சொறி நாய்கள் ஒலமிடுகின்றன. மண் பொந்துகளில் இருந்து வெளிப்பட்ட நண்டுகள்துடிக்கின்றன. நாய்களின் வியூகத்தில் சிக்கிக் கொண்ட பூனை, ஒரு குழந்தையைப் போல் அழுகிறது.

எஸ்தர் தட்டுத்தடுமாறி எழுந்து, தள்ளாடித் தள்ளாடி நடந்து, தொலைவாய் நின்ற மனோகரின் தோள் மேல் சாய்கிறாள். அதற்குள், அந்த மூவரில் முதல்வன் ‘இந்தாமே... நூறு ரூபாய்...’ என்று அவளிடம் நீட்டிவிட்டு நடையைக் கட்டுகிறான். அவளுக்கு, சந்தோஷம் தாங்க முடியவில்லை... எல்லா பசங்களையும் சேர்த்து ஊசிப் போட்டுக்கலாம். பத்து மில்லி மருந்துக்கு தேறும்... சொர்க்க லோகத்தை, பேரின்ப பெரு உலகை சிருஷ்டித்துக் கொள்ளலாம்.

அந்த நூறு ரூபாய் நோட்டை இடது கைக்கு மாற்றி, வலது கையை பேன்டுக்குள் நீட்டியவள்திடுக்கிடுகிறாள். ‘அய்யோ ஆயிரம் ரூபாய் பர்ஸ். பர்ஸ்க் காணோன்டா... காணோன்டா...’

எஸ்தர், குத்து காலிட்டு உட்கார்ந்தாள். தலையில் கை வைத்தாள். வெடிக்கப் போனது போல் சிதறப் போனதலையைப் பிடித்துக் கொண்டாள். அந்தத் தலையை, பம்பரமாய் ஆடவிட்டாள். வாயை மோசம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/254&oldid=635701" இலிருந்து மீள்விக்கப்பட்டது