பக்கம்:பாலைப்புறா.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 255

போயிட்டனே... போயிட்டனே...’ என்று புலம்பவிட்டாள். கரங்களை, மண் தரையில் போட்டு போட்டு அடிக்கவிட்டாள்.

மனோகர், கீழே குனிந்து, அவளை தூக்கி நிறுத்தினான். மண் பட்ட அவள் உடம்பைத் தட்டிவிட்டான்.

‘மனோ..என்னை நம்புறியாடா... ஆயிரம் ரூபாய்... அந்த ரெளடிப் பசங்கதாண்டான அபேஸ் பண்ணிட்டாங்க... மனோ... மனோ... என்னை நம்புறியாடா...?”

‘ஒன்னை... நம்புறேன்னு சொல்லமாட்டேன். எஸ்தர்... சந்தேகப்பட் டால் தானே... நம்புறதுக்கு? கலைவாணியை எப்படி மதிக்கேனோ.. அப்படித்தான் ஒன்னையும் மதிக்கேன் எஸ்தர்...’

எஸ்தர், எந்தவித உடல் தாகமும் இல்லாமல், அவனை அப்படியே இறுகப் பிடித்துக் கொள்கிறாள். இருவரும் தொலைவில் கிடக்கும் தோஸ்துக்களையும் மறந்து, இருட்டின்நிழல்களாக இணைந்து நிற்கிறார்கள். கனைப்புச் சத்தம் கேட்டு நிமிர்கிறார்கள். அன்புமணி, சகாக்களோடு நிற்கிறான்...

‘என்ன எஸ்தர்... எவ்வளவு தேறிச்சு...’

“அதை ஏன் கேட்கிற...? மனோகர் கொடுத்துவச்ச ஆயிரம் ரூபாய பொறுக்கிப் பசங்க... பிடுங்கிட்டுப் போயிட்டாங்க...”

‘இதுக்குத்தான் நம்ம கிட்டே ஒளிவு மறைவு கூடாது என்கிறது. இந்த சசிகுமார், ஒனக்கும் எனக்கும் எவ்வளவு பணம் போட்டிருப்பான். இந்த சேகர் பயல் பணத்தில... எவ்வளவு ரூபாய தின்னுருப்போம்... எங்களைவிட, ஒனக்கு ஆயிரம் ரூபாய் பெரிசா போயிட்டு பாரு...”

‘தப்புத்தாண்டா. தப்புத்தான். கைமேல் பலன் கிடச்சிட்டு... ஆனாலும் நூறு ரூபாய் எறிஞ்சிட்டு போனாங்கடா... வாடா... ஊசி போடலாம்”

மனோகர், பித்துப் பிடித்து நின்றான். எஸ்தரின் மனம், இப்போது மாறிவிட்டது போல் தோன்றியது. போகிற போக்கைப்பார்த்தால், இவளே அந்த லாக்கர்நகைகளை கேட்பாள் போல் தோணுதே... இவங்க சாவகாசத்தை அறுத்தால், நான்தானே அறுந்து போவேன்... கள்ளி மரத்தில இருந்து ஒடிஞ்சி விழுந்த கிளையாக போவேனே...

அன்புமணி, மனோகர் பக்கமாய் வந்தான். அவன் முதுகைத் தட்டிக் கொடுத்தான். அவன் கையோடு, தன் கையைக் கோர்த்து லாக்’ செய்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/255&oldid=635702" இலிருந்து மீள்விக்கப்பட்டது