பக்கம்:பாலைப்புறா.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 பாலைப்புறா

பின்னர் அவனை, இதமாக நடத்திக் கொண்டு போனான். இவர்களை, இடைமறிப்பது போல் ஒரு பேட்டரி வெளிச்சம்... நிலவு பூமிக்கு வந்து, மூன்றடி உயரத்தில் நின்று, அவர்களைப் பார்ப்பது மாதிரியான வட்ட வெளிச்சம். அந்த வெளிச்சத்தில் ஒரு கருப்பனும், இன்னொரு சிவப்பனும் முகம் காட்டினார்கள். அன்புமணிக்கு அடையாளம் தெரிந்தது....

‘அடடே... சலீம்... அண்ணனா... இவரு..?”

“இவருக்கும், என்வேலதான்... பெயரு. தர்மராஜா’

‘நல்லா இருங்க... என்ன விஷயமாய்...?”

‘அதை ஏன் கேக்குறே...? குவாய்த்துல இருந்து ஒரு கொழுத்த பணக்காரன் வந்திருக்கான். அவனுக்கு அழகான ஒரு பையன் வேணுமாம். அறிவு கெட்டவன். இப்பவே வேணுங்குறான். பகலாய் இருந்தால் செட்டப் பண்ணிடலாம். நட்சத்திரப்பசங்க... எத்தனையோபேர் இருக்காங்க”

சலீம் பேசிக் கொண்டிருந்த போது, தர்மராஜா, ஒவ்வொருவர் முகமாய் பேட்டரி வெளிச்சத்தில் பார்த்தான். எவனும் சரிப்பட்டதாய் தெரியல. ஆனால், இவன், கிராமப்புற சாயல்...

‘ஒன் பேரு என்னப்பா...?”

‘மனோகர்...’

‘இந்தாப்பாரு.. மனோகர் நாளைக்கு எப்படியோ... இன்னிக்கி, நீ மகாராஜா... நட்சத்திர ஹோட்டலுல தங்க. விஸ்கி, பிராண்டி, பிரியாணி, காலையில் கைலயே ஆயிரம் ரூபாய். அதுல எனக்கு இரு நூறு... சலீம் அண்ணாத்தைக்கு முந்நூறு. அப்படியும் சொளையா ஐநூறு ரூபாய் கிடைக்கும்... ஆனால் அந்த ஷேக் என்ன செய்தாலும்... என்ன செய்யச் சொன்னாலும், நீசம்மதிக்கணும்...”

மனோகர், இலை மறைவாய், காய் மறைவாய் கேள்விப்பட்டிருக் கிறான். இங்கே கிடப்பவர்கள், தங்களது அனுபவத்தை இவனிடம் சொல்ல முயற்சி செய்து இருக்கிறார்கள். அப்போதெல்லாம், இவன்காதுகளை மூடிக் கொள்வான். நினைத்தாலே வாந்தி வரும்... ஆனால் இப்போதோ வாழ்க்கையே வாந்திய்ாகிவிட்டது. இனிமேலும், இந்த கடற்கரையிலும், அந்த போலீஸ் நிலையத்திலும் சீரழிய முடியாது. எவளைப் பிடிப்பாக நினைத்தானோ... அந்த பிடிப்பே, ஒரு பிடியாகிவிட்டது. எஸ்தர்... எதை நினைத்துச் சொன்னாளோ, இனிமேல் இந்த சகவாசம் கூடாது... இது சகவாசம் அல்ல... சாகப்பயப்படுவதால் ஏற்பட்ட வாசம். இருந்த பணமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/256&oldid=635703" இலிருந்து மீள்விக்கப்பட்டது