பக்கம்:பாலைப்புறா.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 257

போயிற்று. ஒரு லட்சம் ரூபாயும்... கலைவாணி பெயரில் போடாமலே போயிட்டு. பேங்கில் இருந்ததை சிறுகச்சிறுக எடுத்துச்சிறுத்துப் போயிற்று. இனி இருப்பது, அந்த லாக்கர் நகைதான் எஸ்தர் சொன்னது போல, இந்த அன்பு மணி லாக்கர் கதவுதான், ‘சொர்க்கத்திற்கு வாசல்” என்று அடம் பிடிப்பான்... இந்த இரண்டு லட்சம் ரூபாயை, எப்படி போக்கினானோ.. அப்படிப் போக்கிவிடுவான்...

மனோகருக்குள், ஒரு வெறி ஏற்பட்டது. உடம்பை எவ்வளவு தூரம் கெடுக்க வேண்டுமோ... அவ்வளவு தூரம் கெடுக்க வேண்டும். எவ்வளவு சீக்கிரமாசாக வேண்டுமா, அவ்வளவு சீக்கிரமாய் சாக வேண்டும்...

“என்னப்பா... பேசாமல் நிற்கே...? ஒன்னைவிட்டால்... வேற ஆள் இல்லன்னு நெனைச்சியா?”

‘அப்படி இல்ல சார்... வாங்க போகலாம்”

சலீம், அன்பு மணியின் பைக்குள் பத்தோ, நூறோ, ஒரு நோட்டைத் திணித்தான். தர்மராஜா, மனோகரின் தோளைப் பிடித்து, கழுத்தைத் தொட்டான். மனோகர், இருவர்கரங்களையும் பிடித்துக் கொண்டு, திரும்பிப் பாராமலே நடந்தான்...

மனோகர், இப்படி தானாய் ஒரு முடிவெடுத்து, தானே ப்ோனதில், அன்புமணி அசந்துவிட்டான். ஆனாலும் மறுநாள், தன்னந்தனியாய் அவனை மடக்கிவிடலாம் அல்லது மயக்கிவிடலாம் என்ற நம்பிக்கை. ஆனால், எஸ்தரால் தாள முடியவில்லை. எந்த விஷயத்திலும் தன்னிடம் யோசனை கேட்கும் மனோகர், இப்போது ஏறெடுத்துப் பார்க்காமலே போவது அவளுக்கு அதிர்ச்சியானது...

எஸ்தர், சிறிது விலகிப் போய் நின்றாள். அவள் ஒதுங்குவதாக சகாக்கள் அனுமானித்த போது, அவள்மாங்கு மாங்கென்று அழுது கொண்டிருந்தாள். வேலூரிலேயே கண்களை நீரில் கரையவிட்டவள், இப்போது கரையாத கண்களை மீண்டும் குளிப்பாட்டினாள். அழுகையையே அழ வைக்கும் நிலைக்கு வந்து விட்டவள், இப்போது குமுறிக் குமுறி அழுதாள். தனக்காக அழாமல், தானாக அழுதாள். எந்த நட்சத்திர ஹோட்டலில் மனோகர் தங்குவானோ... எங்கே தங்கி, பல்வேறு கம்பெனிகளிடம் பேச்சு நடத்தினானோ... அந்த மாதிரியான நட்சத்திர ஹோட்டலுக்கு, அந்த மனோகர் போகிறான். எந்த மாதிரி...!

எஸ்தருக்கு, கண்கள் கடலானது... கண்ணிர் அலையானது... நெஞ்சுக்குள் வெடித்த விம்மல், அந்தக் கடலுக்குக் குரலானது. t lfr. f7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/257&oldid=635704" இலிருந்து மீள்விக்கப்பட்டது