பக்கம்:பாலைப்புறா.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

இப்போதைக்கு, அது இரண்டு மாடிக் கட்டிடம். மூன்றாவது மாடி முளைவிடப் போவது போல், இரண்டாவது மாடியில் மூன்றடி உயரச் சுவர்களில், சதுரம் சதுரமாய் கட்டப்பட்ட செவ்வகக் கம்பிகள் செங்குத்தாக நீண்டு கொண்டிருந்தன. இந்தக் கட்டிடத்தில், அடிவாரத்திலும் ஒரு தளம் இருக்கிறது. ஆனால், அங்கே என்ன இருக்கிறது என்பது பட்டுச்சேலை டாக்டர் என்று பரவலாகப் பேசப்படும் டாக்டர்சுமதிக்கே வெளிச்சம். இந்தக் கட்டிடத்திற்கு முன்னால் போய் நின்று, அண்ணாந்து பார்த்தால், மக்கள் விழிப்புணர்வு இயக்கம்’ என்று, நவீன ஒவியப் பின்னணியில் எழுதப்பட்ட தேக்குப்பலகை, ஆங்கிலத்தில் மாஸ் அவார்னஸ் டைரக்டரேட்’ என்று பெயர். இதனாலோ அல்லது இது அல்லாத காரணங்களாலோ, படித்தவர்கள் இந்த வாசகத்தைச் சுருக்கி மேட் என்பார்கள். தெரியாத்தனமாய், இப்படி ஒரு பெயரை வைத்து, அதன் சுருக்கம் இப்படி ஆகிவிட்டதே என்று டாக்டர் சுமதி, ஆரம்பத்தில் வருத்தப்பட்டாலும், இப்போது சந்தோஷப்படுகிறாள்... ஆமாம். இந்த அப்பாவிமக்களைகரையேற்றுவதில், எங்கள் இயக்கத்திற்கு ஒரு பைத்தியம்’ என்கிறாள். பைத்தியக்கார பொது மக்களை, எய்ட்ஸ் சம்பந்தமாக பக்குவப்படுத்துவதில் நாங்கள் மேட்... பைத்தியம்தான் என்று அழுத்திப்பேசுகிறாள்.

என்றாலும், இந்த இயக்கத்தின் பெயரைப் பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. முழுக்க முழுக்க எய்ட்ஸ் விழிப்புணர்வு காரியங்களைச் செய்யும் இந்த அமைப்பு, ஏன் எய்ட்ஸ் என்ற வார்த்தையை சேர்க்கவில்லை என்று கேட்கும் இதே மாதிரியான ஒரு சில அமைப்புகள், அப்படிக் கேட்டுவிட்டு குறுஞ்சிரிப்பாகவும் சிரிக்கின்றன. எய்ட்ஸ் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/258&oldid=635705" இலிருந்து மீள்விக்கப்பட்டது