பக்கம்:பாலைப்புறா.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.சமுத்திரம் 259

போட்டுவிட்டால், பெண்ணியம், ஊரக வளர்ச்சி, பெண்சிசுக் கொலை போன்ற பிரச்சினைகளில் ‘விழிப்புணர்வு” இயக்கங்களை நடத்துவதற்கு, சம்பந்தப்பட்ட அரசுத்துறைகளிடமும், வெளிநாட்டு நிறுவனங்களிடமும், காசு கறக்க முடியாதே என்கின்றன. ஒரு வேளை எதிர்காலத்தில் எய்ட்ஸ் நோய் குணப்படுத்தப்படலாம் என்று டாக்டர் சுமதி பயந்து, இந்த எய்ட்ஸ்க்குப் பிறகும் தனது அமைப்பு இருக்க வேண்டும் என்பதற்காக, இப்படி பொதுப்படையான பெயரைச் சூட்டியிருப்பதாக, இந்த அமைப்பு போல் வளராத இதர அமைப்புகள் இயம்புகின்றன. ஒரு தடவை, ‘இப்படிப்பட்ட கருத்து பற்றி டாக்டர் சுமதியிடமே செய்தியாளர் கூட்டத்தில், ஒருத்தர் கேட்ட போது, காய்த்த மரத்தில்தானே... கல்லடி விழும்’ என்று அவள் பதிலளித்தாள். உடனே இன்னொரு நிருபர் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது என்றும் வைத்துக் கொள்ளலாமே என்ற கேட்டபோது, டாக்டர் சுமதி செய்தியாளர்களுக்காக திட்டமிடப்பட்ட ‘காக்டெய்ல் பார்ட்டியை ரத்து செய்து விட்டாளாம். எப்படியோ போகட்டும்...

கலைவாணி, கீழே இருந்து படியேறி, முதலாவது தளத்திற்குள் நுழைந்தாள். ஒரே கிளு கிளுப்பு... உடலெங்கும் பொங்கிய வியர்வை, உடனடியாய் பன்னீராய் மாறிய பரவசம்... உச்சிச் சூரியனை உள்ளே விடாமல், ஆகாயத்தில்கட்டிப் போட்டது மாதிரியான நேர்த்தி; தெர்மகோல் போட்ட மேற்பரப்பு... இவற்றிற்கு இடையிடையே நிலா விளக்குகள்... பரந்து விரிந்திருந்த தளத்தில், ஆங்காங்கே அலுமினிய உருளைக் கம்பிகளில் பொருத்தப்பட்ட நோவா பலகைகள்... அதோடு தளத்தை சின்னச் சின்ன தடுப்புக்களாய் காட்டும் செக்ஷன்கள்... ஒவ்வொரு தடுப்பறையிலும் அழகழகான சொக்காப் பெண்கள். பனியன்சட்டை போட்ட இளைஞர்கள்... இவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை கூறுகிறவர்களாம்...

கலைவாணி, இந்த நோவா தடுப்புகளில் இருந்து தனித்திருந்த அறைக்குள் போனாள். நீண்ட பெரிய கூடம்...இடதுபக்கம் சோபா செட்... வலது பக்கம் ஒரு மேஜை... அதன்மேல் ஒரு எலக்ட்ரானிக் டைப்ரைட்டர்... நீளவாக்கில் பல்வேறு பைல்களை கொண்ட ரேக்... இந்த ஜடப் பொருட்களைப் பார்த்த கலைவாணி, எதிர் பக்கம் ஜடமாய்க் கிடந்த ஒரு பிள்ளையாண்டானைப் பார்த்தாள். கழுத்தில் ஒருகலர்டை கட்டியிருந்தான். அந்த ஏலியிலும் அவன் முகம் வேர்த்திருந்தது. இவனது இருபக்கமும் நடுத்தர வயதைத் தாண்டிய இருவர்... பெற்றோராய் இருக்கலாம்... சூட்டுகோட்டு போட்ட அந்த மனிதர் கையில் ஒரு கவர்.. டாக்டர் அசோகன் மேசையில் அடுக்கி வைக்கப்பட்ட கவர்கள் மாதிரி அதே நிறம். அம்மாக்காரியின் கண்கள் சிவந்திருந்தன... அந்த மனிதர், மகனின் முதுகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/259&oldid=635706" இலிருந்து மீள்விக்கப்பட்டது