பக்கம்:பாலைப்புறா.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 பாலைப்புறா

வழியாக தங்கச்சங்கிலி போட்ட கடிகார கையை நீட்டி, அவன் முதுகைத்தட்டிக் கொடுக்கிறார். அந்த இளைஞன், ஏதோ பேசப் போகிறான்; பிறகு பேச்சற்று, மூச்சற்றவன் போல் மேற்கூரையை நோககுகிறான். பார்வையில் கூட ஒரு கோர்வை இல்லாதது போல், குமைந்து போய்க் கிடக்கின்றான்.

கலைவாணி, அவர்களை ஊனுருகிப் பார்ப்பது போல் பார்த்துவிட்டு, உள்ளே பச்சைக் கண்ணாடி ஜன்னல்களைக் கொண்ட அறைக்கு பக்கவாட்டில், ஒரு முக்காலியில் உட்கார்ந்திருக்கும் மீசைக்காரனிடம் ஏதோ பேசினாள். அவனோ அவள் வருவது தெரியும் என்பது போல் தலையாட்டி விட்டு, அதே சமயம் அவளைக் கையமர்த்தினான்... கலைவாணியை, பக்கத்தில் உட்காரச் சொல்லுகிறான். அவள் உட்காரமலேயே, கடிகாரத்தைப் பார்க்கிறாள். பத்து நிமிடத்திற்குள் டாக்டர் அம்மாவைப் பார்க்க வேண்டும் என்று எவளோ ஒருத்தி சொல்லிவிட்டுப் போனாள். இவள் நிதானமாக புறப்படப் போனபோது, ‘டெஸ்பாட்ச்” செக்ஷன் எடுபிடிப் பெண்கள் இவளை அவசரப்படுத்தினார்கள். சொன்ன நேரத்திற்கு சுமதியம்மாவைப் பார்க்காவிட்டால், அப்புறம் பார்க்க வேண்டிய அவசியமே இராது என்று வேறு பயமுறுத்தி விட்டார்கள். இவளுக்கும் வேலை போய்விடக் கூடாதே என்ற பயம். மாதம் அறுநூறு ரூபாய் சம்பளமும், இருப்பதற்கு கிடைத்துள்ள ஒரு அறையும் இழுபறியாகி விடக் கூடாதே என்ற அச்சம். இந்த அமைப்பில் சேர்ந்த இந்த ஆறுமாத காலத்தில், டாக்டர் சுமதியை இதே அறையில் ஒரே ஒரு முறைதான் பார்த்திருக்கிறாள். அதுவும், அசோகனின் வேண்டுகோள் படி; அவனது மருத்துவ மனையில் இருந்து இவளைக் காரில் ஏற்றிக் கொண்டு போன சுமதி, வழியிலேயே இவளை இறக்கிவிட்டு, ‘நான் இப்படியே கலெக்டர பார்க்கப் போறேன்... நீ ஆபீஸ்ல போய் வெயிட் பண்ணு’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். மணிக்கணக்கில் காத்திருந்த கலைவாணி, அறைக்குள்நுழையப் போன சுமதிக்கு ஒரு வணக்கம் போட்டாள். உடனே டாக்டர் சுமதியும், இவள் உள்ளே வரப்படாது என்பது போல் வாசல் கதவை மறைத்த படியே ‘பி.ஏ. விடம், இவள் சம்பந்தமாக ஏதோ பேசிவிட்டு உள்ளே போய்விட்டாள். இந்த பி.ஏ. சரியான மேனாமினுக்கி... எங்கெல்லாமோ போய், யார் யாரிடமோ பேசி, கும்மாளம் அடித்துவிட்டு, ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, இவளுக்குரிய வேலைகளை விளக்கினாள். கிரவுண்ட் புளோரை விட்டு, எந்த புளோருக்கும் போகப்படாது. என்னென்னகடிதங்கள், யார் யாருக்கு போகின்றன என்பதைக் குறிப்பெடுக்க வேண்டும். கவர்களை ஒட்ட வேண்டும். சைக்கிள் பையன் போட்டுவிட்டுப் போகும் செய்திப்பத்திரிகைகள், வாரப்பத்திரிக்கைகள் ஆகியவற்றில், இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/260&oldid=635708" இலிருந்து மீள்விக்கப்பட்டது