பக்கம்:பாலைப்புறா.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 261

அமைப்பைப் பற்றியோ, டாக்டர் சுமதியைப் பற்றியோஎதாவது செய்தியோ அல்லது ரைட்டப்போ வந்திருந்தால், அதைச்சுட்டிக் காட்டி, உடனடியாய் மேலே அனுப்பிவைக்க வேண்டும். இதுதான்.அவளோடவேலை... ஆனால், இதுவே அவளுக்குச்சரியாக இருந்தது.

முக்காலியில் இருந்த மீசைக்காரன், கிட்டத்தட்ட தூங்கிப் போனான். கலைவாணிக்கு சங்கடமாய் இருந்தது. ஒரு வேளை, டாக்டரம்மா தான் இன்னும் வரவில்லை என்று நினைத்துவிடப் படாதே என்ற முன்னெச் சரிக்கை. அந்தம்மாவை முழுமையாய்ப் பார்த்து, நேருக்கு நேராய் பேசப் போவது இதுவே முதல் தடவை. டாக்டர் அசோகன் மருத்துவமனையிலும், அதற்குப்பிறகு இங்கேயும் அவ்வளவு சரியாகப் பார்க்கவில்லை. இந்தம்மா காரில் இறங்கும் போதும், ஏறும் போதும் மட்டுமே சில சமயம் பார்த் திருக்கிறாள். எவனும் எவளும் இந்தம்மா கூப்பிடாமல், முண்டியடித்து முன்னால் போய் நிற்கக் கூடாது என்பது பி.ஏ.ம்மா ஆணை. அதோடு இந்த சுமதியம்மா, அந்த அலுவலகத்தில் இருந்ததை விட, வெளிநாடுகளில் இருப்பதே அதிகம்... ஆகையால் இந்தப் பெண் விக்கிரமாதித்தை கூப்பிட்டு அனுப்பிய காரணத்தைக்கண்டறிய, கலைவாணிக்கும் ஒரு ஆவல். எவ்வளவு நாளைக்குத்தான் கவர்களையே ஒட்டிக் கொண்டிருப்பது...

கலைவாணி, பொறுமை இழந்தாள். வழுவழுப்பான ரப்பர் மெத்தை யால் போர்த்தப்பட்ட கதவைத் திறந்தபடியே, உள்ளே போனாள். அப்போது அந்தக்கதவுச்சத்தமும், மீசைக்காரனின் குறட்டைசத்தமும் ஒன்றாய்க் கலந்து ஒரு விநோத சத்தத்தை ஏற்படுத்தியது.

அந்த அறைக்குள், டாக்டர் சுமதி ஒரு சுழல் மெத்தை நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள். அது முன்னாலும், பின்னாலும் வளைந்து அவளை மலக்க வைத்தும், கவிழ்க்க வைத்தும் கண்ணாமூச்சி ஆடியது. எதிரே உள்ள வட்ட வளைவு பளிங்கு மேஜையில், விதவிதமான வண்ணங்களில் அடுக்கடுக்கான பைல்கள்... கண்ணைப் பறிக்கும் வண்ண விளக்கு... ஒரு டெலிபோன்... ஒரு இண்டர்காம். ஒரு கம்ப்யூட்டர். ஒரு வீடியோ திரை... அந்த மேஜைக்கு அப்பால் உள்ள மெத்தை நாற்காலிகளில், இரண்டு வெள்ளைக்காரிகள்... ஒரு காரன்... அந்தப் பெண்கள், வயதுகானா வனப்பு... சுழல் நாற்காலிக்காரியின் சிவப்பு முகமும், வெள்ளக்காரர்களின் வெளுப்பும், வெள்ளை ஆகாயத்திட்டுக்களுக்கு இடையே, காலைச்சூரியன் தலையாட்டி பேசுவது போல இருந்தது. சும்மா சொல்லக் கூடாது. அந்த சூழலுக்கு ஏற்ப, டாக்டர்சுமதி இடுப்புக்குக் கீழே பட்டுச்சேலை கட்டியிருந் தாலும், அதற்கு மேல் கட்சோளிதான் போட்டிருந்தாள். முந்தானை பட்டும் படாமலும், மார்பகத்திற்கு இடையே ஒல்லியாய் போய், கழுத்தை வளைத்து ஒரு பக்கத்து தோளில் தொங்கியது. தலைமுடி, வழக்கத்திற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/261&oldid=635709" இலிருந்து மீள்விக்கப்பட்டது