பக்கம்:பாலைப்புறா.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 பாலைப்புறா

விரோதமாய் மேல் நோக்கி சுருட்டப்பட்டிருந்தது.

அந்த நால்வரையும் நோக்கிப் போகப் போன கலைவாணி, அபபடியே நின்றாள். அவர்கள் பார்த்த வீடியோ படத்தை இவளும் பார்த்தாள். என்ன இது...? டாக்டர். அசோகனின் எய்ட்ஸ் வார்ட். சந்தேகம் இல்லாமல் அதே நோயாளிகள். அதே ஆயா. அதே வார்ட் பையன். ஆயா, ஒரு நோயாளியை கிணற்றுக் கல்லில் உட்கார வைக்கிறாள். சுமதியம்மா... பக்கத்தில் உள்ள வாளியில் இருந்து, தண்ணீரை ஒரு குவளையில் மொண்டு மொண்டு, அந்த நோயாளியின் தலையில் ஊற்றுகிறாள். அந்த உடம்பை, வார்ட் பாய் ஒரு பிரஷ்ஷால் தேய்க்கத் தேய்க்க, இவள் சோப்பை நீட்டுகிறாள். தண்ணிரைக் கொட்டுகிறாள்... அப்புறம் அடுத்த காட்சி. சுமதியம்மா எய்ட்ஸ் நோயாளிகள் தலைகளைக் கோதி விடுகிறாள். தண்ணீரை, பயத்தாலோ அல்லது பாசத்தாலோ நடுங்கும் கரங்களால் துடைத்து விடுகிறாள். மூன்றாவது காட்சியில், அவர்கள் வாயில் உணவூட்டுகிறாள். நான்காவது காட்சியில் சுமதியம்மாவின் தனிப்பேட்டி... ஐந்தாவது காட்சியிலாவது அசோகன்வருவாரா... இல்லை... அதோடு சரி...

கலைவாணிக்கு, டாக்டர் அசோகனை நினைக்க நினைக்கப் பாவமாய் இருந்தது. இதை, அவனிடம் சொல்லலாமா, வேண்டாமா என்று நிறுவன விசுவாசத்திற்கும், உண்மைக்கும் இடையே இழுபட்டுக் கொண்டிருந்தாள். டாக்டர் சுமதியை, அந்த மூன்று வெள்ளைக்காரர்களும் அதிசயித்துப் பார்த்தார்கள். வெள்ளைக்கார மனிதர், அவள் கையை பலம் கொண்ட மட்டும் குலுக்கினார். பெண்களில் இளையவள், மேஜையில் உடல் சாய்த்து, தலையை பாம்பு போலாக்கி, சுமதியில் கன்னத்தில் ஒரு முத்தமிட்டாள். வயதானவள், ஒண்டர்புல், ஒண்டர்புல்...’ என்று தன்பாட்டுக்குச்சொல்லிக் கொண்டிருந்தாள்.

குட முழுக்கு செய்யப்பட்ட கோபுர உச்சிபோல் கொண்டை போட்டிருந்த சுமதி, அந்த வெள்ளைக்கார பெண்களுக்குக் கை கொடுத்தாள். அந்த வெள்ளைக்காரர் பிடித்த கரத்தை லபக்கென்று எடுத்துக் கொண்டு, அவருக்குக் கை கூப்பினாள். தமிழ்ப் பண்பாட்டை விட்டுக் கொடுக்க (DfT?...

இந்த அமர்க்களத்திற்குப் பிறகு, இதுதான் சமயமென்றோ அல்லது ஏற்கெனவே திட்டமிட்டபடியோ, டாக்டர் சுமதி ஒரு வரை படத்தை எடுத்தாள். மேஜையில் ஒரு முனையில் இருந்த ஸ்லைட் புரஜெக்டரில் சொருகினாள். மறுமுனையில் உள்ள சின்னத் திரையில் ஒரு வரைபடம் தோன்றியது. உடனேசுமதி, கலைவேலைப்பாடு கொண்டஒரு ரூல்தடியால், ஒவ்வொரு இடத்தையும் சுட்டிக்காட்டி, இசையமைப்பது போல் குரலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/262&oldid=635710" இலிருந்து மீள்விக்கப்பட்டது