பக்கம்:பாலைப்புறா.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 பாலைப்புறா

‘எனக்கென்னமோ... இந்த புராஜெக்ட் முழுவதையும், நீங்களே நடத்தணுமுன்னு தோணுது... எத்தனையோபேர் புராஜெக்டுக்கு பைனான்ஸ் செய்யத் தயாராய் இருக்காங்க... ஆனால் இந்த திட்டம்... எய்ட்ஸ்சால் மரணமான ஒரு உத்தமரோட பணத்திலயே நிறைவேற்றப்பட்டால்... அதுவே, அந்த மாமனிதனுக்கு செய்யப்படுகிற மகத்தான அஞ்சலி ஆயிற்றே... இல்லையாமேடம்...?”

‘ஒ... கே... குட். நீங்களே... இந்த பிராஜெக்ட்டுக்கு இன்சார்ஜ்... நீங்களே, எங்கள் லோகல் ஏஜெண்ட்... அப்புறம் இதே ஏரியாவில டாக்டர் அசோகன்னு ஒருத்தர்... எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சேவைசெய்கிறாராமே... ஏன் சிரிக்கிறீங்க...”

‘'டாக்டர் அசோகன் என்னோட சபார்டினேட்... அது என்னோட மருத்துவமனை... போய்ப் பார்ப்பாமோ...’

‘இப்போ... நேரமில்ல... டாக்டர் சுமதி... நீங்க நெசமாவே கிரேட்... இந்த உலகம் இன்னும் உயிரோட இருக்குதுன்னா...அதுக்கு ஒங்களை மாதிரி தொண்டர்களே காரணம்... யூ ஆர் லைக் மதர் தெரோஸா... மேடம் கியூரி... டாக்டர் முத்துலட்சுமி’

‘நோ... நோ...ஒங்க டிரஸ்ட்டோட நிறுவனர்ஜான் பெட்டிக்கோவிற்கு நீங்க பெருங்கருவி... நான் உங்களுக்கு ஒரு சிறு கருவி... எல்லாவற்றுக்கும் மேல. காட் இஸ் கிரேட்...’

‘ஒகே... கனடாவுக்கு திரும்பினதும் முறைப்படி லட்டர் போடுறோம்” ‘ஒரு சின்ன விண்ணப்பம்...’

‘வாட்...? ‘ அப்படியே இந்த புராஜெக்ட் சாங்க்ஷன் ஆகாட்டி கூட பரவாயில்ல... ஆனால், நீங்க அடிக்கடி இங்கே வரணும்... ஒங்க தரிசனம், எனக்கு கிடைக்கணும்... ஏன்னா... ஒங்கள் மூலம்தான் சேவை, தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கு அர்த்தம் ஆழமாகுது’

‘எங்களால வர முடியாட்டாலும்... ஒங்களை கனடாவுக்கே வரவழைப்போம் டாக்டர் சுமதி’

வயதான வெள்ளைக்காரி அம்மா, மனம் நெகிழ்ந்து, டாக்டர் சுமதியின் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தாள். இளவயதுக்காரி, அவளைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தாள். சிறிது நேரம், ஒருவரை ஒருவர் பார்த்தபடியே நின்றார்கள். அதற்குப் பிறகு, டாக்டர் சுமதி அந்த மூவரையும் வழி நடத்தி வாசலுக்கு கொண்டு வந்தாள். ‘ஒங்களை ஹோட்டலுல சந்திக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு, கதவைத் திறந்து வைத்து வாசலாக்கினாள்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/264&oldid=635712" இலிருந்து மீள்விக்கப்பட்டது