பக்கம்:பாலைப்புறா.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 265

வணக்கம், போட்டபடியே, அந்தக் கதவைப் பிடிக்கப் போன கலைவாணியை, மோவாயை ஆட்டிநின்ற இடத்திலயே நிற்க வைத்தாள்...

அந்த மூவரையும் வெளியே அனுப்பிவிட்டு, கையை விட்டதும் த்ானாக பூட்டிக் கொண்ட கதவுப் பக்கம் நின்றபடியே, கலைவாணியைப் பார்த்துச் சீறினாள்.

‘ஒன்னையார் இங்கே நிற்கச்சொன்னது?”

‘நீங்கதான் வரச்சொன்னிங்க மேடம்...”

‘வரச் சொன்னால், இப்படி உள்ளே வந்து தான் நிற்கணுமா...? வெளில நிற்கப்படாதா...!”

‘வெளிலதான். நின்னேன் மேடம் நான்... வரவே இல்லன்னு நீங்க

நெனச்சுடக்கூடாதுன்னுதான்... உள்ளே வந்து நின்னேன் மேடம்...’

“நல்ல வேளை... சோபாசெட்டுல உட்கார்ந்து, கால்மேலகால் போட்டு உட்காராமல் நின்னியே... அதுவரைக்கும் நன்றி... நீ கிராஜுவேட் தானே... அடிப்படை மேனர்ஸ் கூடவா தெரியாது...!”

‘நான்... யார் மேலயும் என்னைத் திணிக்க மாட்டேன் மேடம். ஒரு வேளை... அந்த வெள்ளைக்காரங்களோட நீங்க பேசும் போது... என் உதவி உங்களுக்கு தேவைப்படுமோன்னுதான் நின்னேன் மேடம்...’

‘ஒன்னப்பற்றி... ரொம்பத்தான் உயர்வாய் நினைக்கே...’

‘'எதுக்கு... கூப்பிட்டிங்கன்னு சொல்லுங்க மேடம் எனக்கும் தலைக்கு மேல் வேலை இருக்குது... கவர் செய்யுறதுக்குகாக்கிப் பேப்பர்வாங்கணும்... டெஸ்பாட்ச்ரிஜிஸ்டரை...அப்படியே போட்டுட்டு வந்திட்டேன்...’

டாக்டர் சுமதி, மஞ்சள் சேலையில மதர்ப்பாக நின்ற கலைவாணியை, சிறிது பொறாமையோடு பார்த்தாள். இந்த மாதிரி உடம்பு தனக்கு இருந்திருந்தால், இன்னும் எத்தனையோ உள்நாட்டு புராஜெக்டுகளை வாங்கியிருக்கலாம்.

டாக்டர்சுமதி, கலைவாணியை ஆழமாய் பார்த்தாள். அந்த ஆழத்திற்கு அளவு பார்ப்பது போலவும் பேசினாள்.

‘ஒனக்கு... எவ்வளவு இன்டலிஜென்ஸ்... கிராஸ்பிங் பவர் இருக்குன்னு தெரிஞ்சுக்கறதுக்காக கேட்கேன், நாங்க என்ன பேசுனோம், சொல்லு பார்க்கலாம்’

‘ஒட்டு கேட்கிற பழக்கம் எனக்கு கிடையாது மேடம்... அதோடு ஒங்க கான்வென்ட் இங்கிலீசும்... அவங்களோட தொண்டைக்குழி பேசுறதுமான இங்கிலீசும் எனக்குப்புரியல மேடம்...'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/265&oldid=635713" இலிருந்து மீள்விக்கப்பட்டது