பக்கம்:பாலைப்புறா.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 பாலைப்புறா

டாக்டர் சுமதி, இப்போது சிரித்து விட்டாள். அப்பாடாவாக சிரித்தாள். அசோகனை, தனது சபார்டினேட் என்று சொன்னது, அவளுக்குக் கேட்கவில்லை... இவளை அதிகமாக ஒதுக்கவும் கூடாது. அந்தரங்கமாய் பழகவும் விடப்படாது. ஆனாலும் அந்த ‘பி.ஏ. எப்போ வாராளோ... எத்தனை தடவைதான் காதலன மாத்துவாள். எத்தனை தடவதான் ராத்திரி பிக்னிக் போவாள்.

‘ஒனக்கு டிக்டேஷன் எடுக்கத் தெரியுமா...’

‘தெரியும் மேடம்... காலேஜ்லபடிக்கும் போதே கத்துக்கிட்டேன்’

‘'நான் கோபப்பட்டதை தப்பா நினைக்காதே... அவங்க வெளிநாட்டுக்காரங்க... நான் என்னமோ... ஒன்னை வேலைக்காரியாய் ஒரத்தில் நிற்க வச்சாதாய் அவங்களுக்கு ஒரு தப்பு அபிப்ராயம் வரப்படாது பாரு... அதனாலதான் சொன்னேன்”

‘நான் இப்போ...ஒங்களுக்கு என்ன செய்யனும் மேடம்”

‘வெளியிலே பி.ஏ. சீட்ல போய் உட்காரு... விசிட்டர்ஸ் வந்தால்... விசாரி. என்கிட்டே கேட்டுட்டு அனுப்பு... வேலைக்குன்னு யாராவது வந்தால், நீயே திருப்பி அனுப்பி விடு... டெலிபோன்ல யார் பேசினாலும்... ஒன் மினிட்டுன்னு சொல்லிட்டு... என்கிட்ட இன்டர்காமில் பேசிட்டு அப்புறம் பதில் சொல்லு...! ஒனக்கு லைட் ஒர்க்காதான் கொடுக்கேன். இரண்டே இரண்டு நாளைக்குத்தான்... அப்புறம் பி.ஏ. வந்து விடுவாள். இன்றைக்கு இரண்டரை மணிக்கு யூனிசெப் போகணும்... ஐந்தரைக்கு ஒரு யூனிவர்சிட்டி புரோக்கிராம்... மறக்காம ஞாபகப்படுத்து...’

‘எஸ் மேடம்...’

‘உடம்பு எப்படி இருக்குது?” ‘இன்னும் அந்த எபெக்ட் தெரியல மேடம்’ ‘ஒகே...நீ போகலாம். இனிமேல் நான் கூப்பிட்டால் மட்டும், உள்ளே வந்தால் போதும்’

மாம்பழ டிசைன் பட்டுச் சேலையில் பழமைக்குப் பழமையாகவும், கட்சோளி லிப்டிக்ஸ்... கண்மை, மூக்கை முறிக்கும் சென்ட் வகையறாக் களோடு புதுமைக்குப் புதுமையாகவும் நின்ற சுமதியை, கலைவாணி ஒரங்கட்டிப் பார்த்துவிட்டு, வெளியே வந்தாள்.

இன்னமும், அதே இளைஞனும், அவனோடு வந்த பெரியவர்களும் அதே கோணத்தில், அதே முகவாட்டத்தில் இருந்தார்கள். அவர்களை ஆதரவாக பார்த்தபடியே, எதிர்ப்பக்கம் உள்ள மேஜைக்குப் பின்னால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/266&oldid=635714" இலிருந்து மீள்விக்கப்பட்டது