பக்கம்:பாலைப்புறா.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 267

போடப்பட்டிருக்கும் பி.ஏ. நாற்காலியில் கலைவாணி உட்கார்ந்தாள். இதற்குள் எதிர் பக்கத்தில் இருந்து, அந்த மனிதர் அங்கிருந்தபடியே பேசினார்.

‘இப்போவாவது, நாங்க டாக்டரைப் பார்க்கலாமா... எவ்வளவோ சொல்லியும், இந்த மீசைக்காரன் கேட்கல. எனக்கும் வேணும்... எத்தனையோ பேரை நான்காக்க வைத்திருக்கேன்...’

கலைவாணி வினயமாய்க் கேட்டாள்.

‘அய்யா கொஞ்சம் விபரமாய்’

‘அப்போ... அவரு... இப்போநீங்களா... சொல்லித் தொலைக்கேன்... என் பேரு... தேவையில்லை.. சேலம் இன்டஸ்டிரியலிஸ்ட்ன்னு சொல்லுங்க... அவங்களுக்கே தெரியும். இவன் என் மகன் ரகோத்தமன்... ஹெச்.ஐ.வி. கேஸ். போதுமா...? இப்போவாவது விடுவீங்களா..?”

‘ஒரு நிமிடம். ஒரே நிமிடம்..?”

கலைவாணி, இன்டர்காமில் விபரம் சொன்னாள்; அதை வைப்பதற்கு முன்பே, டாக்டர்சுமதி வெளியே வந்து கத்தினாள்.

‘வாங்கோ. வாங்கோ... நேராய் உள்ளே வரவேண்டியது தானே...? ஏம்மா... ஒனக்கு அறிவிருக்குதா... தராதரம் தெரிய வேண்டாம்... ஐயாம் சாரி... சாரி... வாங்க சார்...’

அந்த தொழிலதிபர்... ‘பரவாயில்ல... பரவாயில்ல’ என்றார். பிறகு அந்த மூவரும் சுமதியோடு உள்ளே போனார்கள். கலைவாணி முகம் சுழித்தாள்... மீசைக்காரன் ஆறுதல் சொன்னான்.

‘வருத்தப்படாதீங்க... வேணுமுன்னே ஆட்களை காக்க வச்சுட்டு... இப்படி பேசுறது, நம்ம அம்மாவோடு டெக்னிக்...’

கலைவாணி, வேண்டா வெறுப்பாய், அங்கும் இங்குமாய்ப் பார்த்தாள். ஹெச்.ஐ.வி. பிடித்த அந்த இளைஞன் மனதில் நிழலாடினான். கொடுத்து வைத்து பிறந்தாலும் அதைக் கெடுத்து விட்டவன்... நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்... என்பதை மறந்து போன செல்வச்சீமான்...

கலைவாணி, தன் கவனத்தை வேறு பக்கம் திருப்புவதற்காக, மேஜைக்கு அடிவாரத்தில் உள்ள டிராயரை பார்த்தாள். அது அவசரத்தோலோ என்னவோ திறந்திருந்தது. அதில் ஒரு பெரிய நோட்டுப் புத்தகம். டாக்டர் சுமதி நிறுவனத்தின் ஆண்டறிக்கை.எதேச்சையாய் எடுத்து தற்செயலாய் புரட்டினாள். முதல் பக்கத்தை பார்த்துவிட்டுப் புன்னகைத்தாள். இரண்டாவது பக்கத்தில் புளகாங்கிதம்.அப்புறம் என்ன இது. இந்த டாக்டர் அசோகனும் ஒரு பிராடா..?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/267&oldid=635715" இலிருந்து மீள்விக்கப்பட்டது