பக்கம்:பாலைப்புறா.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EO

ஒரு வார காலமாக, டாக்டர் சுமதியின் பி.ஏ.வான நேர்முக உதவிப்பெண்ணைக் காணவில்லை. விசாரித்துப் பார்த்ததில், அவளே இப்போது குருவுக்கு மிஞ்சியசிஷ்யையாகி, தனியாட்சி செய்யப்போவதாகக் கேள்வி...போட்டி விழிப்புணர்வு இயக்கம் ஒன்றை அமைக்கப் போவதாக வதந்திகள்...இதனால் சுமதியம்மா, படபடப்பாய், பரபரப்பாய் இருப்ப தாகச் செய்தி...ஆனாலும், கலைவாணியை, அங்கேயே உட்கார வைக்க வில்லை. அவ்வப்போது கூப்பிட்டு, பொதுப்படையான விவகாரங்களை ஒப்படைத்தாள். இன்று அப்படித் தான்...காலையலேயே வரச்சொல்லி விட்டாள். முன்னெச்சரிக்கையாக, ஆண்டறிக்கை நோட்டை போனவாரமே எடுத்து, தனது அறைக்குள் எங்கேயோவைத்துவிட்டாள். முந்தாநாள், வேறு எவனோ ஒருத்தன், இந்த உள்ளறைக்குள் அதை டைப் செய்து கொண்டிருந்தான். ஆனாலும், கலைவாணி, அந்த ஆண்டறிக்கையைப் பொறுத்த அளவில் ஒரு கணிப்பொறியாகிவிட்டாள். டாக்டர் அசோகன், கிட்டத்தட்ட ஒரு பினாமி..அங்குள்ள எய்ட்ஸ் நோயாளிகளைப் பராமரிக்க, சுமதிக்கு மூன்று லட்சம் ரூபாய் செலவாகிறதாம். இது அல்லாமல், அசோகனுக்கு மாதாமாதம் எட்டாயிரம் ரூபாய் சம்பளமாம். செத்துப் போகும் எய்ட்ஸ் நோயாளிகளை கெளரவமாக அடக்கம் செய்வதற்கு முப்பதாயிரம் ரூபாய் ஆண்டுச் செலவாம். இதே போல் எய்ட்ஸ் விழிப்புணர்வு இயக்கங்கள், எய்ட்ஸ் பெண்களுக்கு மறுவாழ்வு வழங்குதல், அவர்களின் குடும்பங்களுக்கு நிதியளித்தல் போன்ற பல்வேறு செலவினங்கள். அத்தனைக்கும் ரசீதுகள்.

இன்னும் உள்ளே இருக்கும் சுமதி, அவளுக்கு வேலை கொடுக்காததால், கலைவாணியின் சிந்தனை, டாக்டர் அசோகனையே சுற்றி வந்தது. அவனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/268&oldid=635716" இலிருந்து மீள்விக்கப்பட்டது