பக்கம்:பாலைப்புறா.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 269

நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை... இல்லையானால், இந்த பிராடோடு அவனுக்கு இவ்வளவு தொடர்பு தேவையில்லை.எய்ட்ஸ் நோயாளிகளுக்கு எல்லாமே டாக்டர் சுமதி தான் என்பதுபோல் வீடியோ படம் எடுக்க அனுமதித்திருக்க மாட்டான். அதே சமயம், அவன், தன்னிடம் காட்டிய கரிசனத்தை மறக்க முடியவில்லை.அந்த அசோகனைப் பார்த்தால், அப்படித் தெரியவில்லை. எந்த வரம்பு மீறிய செலவையும், அவன் செய்ததாகத் தெரியவில்லை. உடம்பில் உடையைப் பற்றிக் கூட கவலைப்பட்டதாகத் தெரியவில்லை...அவன் தங்கி இருக்கும் அறையும் சின்னது...பஞ்சு மெத்தை கட்டிலுக்குப் பதிலாய், ஒருபோர்வை போர்த்தப்பட்ட டேப் கட்டில்... ஆனாலும் எந்த புற்றில் எந்த பாம்போ...! எத்தனை சினிமாக்களை பார்த்தாச்சு...! எத்தனைக் கதைகளைபடிச்சாச்சு...! இந்த மாதிரி எளிமையாய் காட்டிக்கொள்ளும் ஆட்கள் தான் இந்திர சித்துகளாக இருப்பார்கள்.

‘'எக்ஸ்யூஸ் மீ...சிஸ்டர்...”

கலைவாணி, நிமிர்ந்து பார்த்தாள். அதே சேலத்துப்பையன் ரகோத்தமன்.பெயர் தெரியாத தொழிலபதிரின் மகன். கண்ணைப் பறிக்கும் பொம்மைச் சொக்கா போட்டிருக்கிறான். அதற்குள்ளே நீளமான தங்கச்செயின்...பால்வடியும் முகம்....சோகம் சுமந்த பார்வை. வாட்ட சாட்டமான உடம்பு...இருபது வயதிருக்கலாம்.

கலைவாணி, அவனைக் கண்துடிக்கப் பார்த்தாள். எய்ட்ஸ் கிருமிகளை எப்படியோ வாங்கிக் கட்டிக் கொண்டான். வெளியே நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை நிர்வகிக்க வேண்டியவன், இப்போது உள்ளே லட்சக்கணக்கான கிருமிகளால் நிர்வகிக்கப்படுகிறான். கலைவாணி, கரிசனத்தோடு கேட்டாள்...

‘என்ன வேணும் தம்பி...?”

‘டாக்டரம்மாவைப் பார்க்கணும். இந்த அழைப்பிதழைக் கொடுக்கணும்...’

‘என்ன அழைப்பிதழ்..?”

‘இந்தாங்க”

கலைவாணி, அதை வாங்கிப் பார்த்தாள். கவரைப் பார்த்தவுடனேயே கவலையுற்று, உள்ளே இருந்ததை எடுத்துப் பிரிக்கிறாள். தங்க பிரேம்

போட்ட அட்டை ஒரு அட்டையே ஐம்பது ரூபாய் பெறும். பளபளப்பான அச்சுக்கோர்ப்பு: ஆமாம். இந்த ரகோத்தமனுக்கும், கோவையில் உள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/269&oldid=635717" இலிருந்து மீள்விக்கப்பட்டது