பக்கம்:பாலைப்புறா.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 பாலைப்புறா

இன்னொரு தொழில்அதிபரின்மகள்சாந்திக்கும் திருமணம். சான்றோரால் நிச்சயிக்கப்பட்டது...மேளதாளம், பிரபலமான பெயர்கள், மூன்று நாள் மூன்று விதமான இசைக்கச்சேரிகள். அத்தனையும் பத்திரிகைகளில் அடிபடும் பெயர்கள். எல்லாவற்றிற்கும் மேல், பல்வேறு தலைவர்களின் வாழ்த்தரங்கம்...

கலைவாணி, அந்த அழைப்பிதழைப் படிப்பதும், படிக்கப் படிக்க, அவனை நிமிர்ந்து பார்ப்பதுமாக இருந்தாள்.படித்து முடித்ததும், அவனிடம் ஏதோ சொல்லப் போனாள். பிறகு, தன் சொல் எடுபடுமா என்று யோசித்துப் பார்த்தாள். இந்தத் திருமணத்தை தடுத்தே ஆகவேண்டும் என்று உறுதி...இன்னும் நான்கே நான்கு நாட்கள்தான் உள்ளன. அசோகனிடம் சொல்லலாமா...? அந்தக் கூட்டுக் களவாணியிடமா... வேண்டாம்... சந்திராவிடம் சொன்னால், அவள் பட்டதே போதும் என்பாள்.. பத்திரிகையாளர்களிடம் சொன்னாலும், அவர்கள் பெரிய இடத்து சமாச்சாரங்களை எழுத மாட்டார்கள். விளம்பரம் போய் விடுமாம்..அப்போ யாரிடம் சொல்வது... எப்படி தடுப்பது...?

எதுவும் பதில் பேசாமல் இருப்பவளை, ஒரு முறைப்பு முறைத்துக் கொண்டே, ரகோத்தமன், கதவைத் திறந்து உள்ளே போனான். அதைக்கூட கலைவாணி பார்க்கவில்லை. இதற்குள் இன்டர்காம் இரைந்தது.

‘'நான்...சேலத்துக்கு...ர.கோத்தமனோட கல்யாணத்தில கலந்துக்கி றேன். டேட்டையும், டைமையும் நோட் செய்துக்கோ...ஒரு நாளைக்கு முன்னால ஞாபகப்படுத்து’

கலைவாணி, வழக்கம்போல் எஸ் மேடம் போடவில்லை. அயோக்கிய ராட்சஸி...தொட்டிலையும் ஆட்டி, குழந்தையையும் கிள்ளிவிடும் அரக்கி...எப்படி இப்படிப்பட்ட மனம் வரும்? ஒரு எதிர்கால எய்ட்ஸ் நோயாளியின் திருமணத்தை தடுக்க வேண்டியவள், இவனை வாழ்த்தப் போகிறாள். இவன் கல்யாணத்தில் வாழ்த்தி, ஒரு அப்பாவிப் பெண்ணின் எதிர்கால ஈமச்சடங்கிற்கு இப்போதே கொள்ளி வைக்கப் போகிறாள். இப்படியும் ஒருத்தி இருப்பாளா... இருக்காளே.காரோடும், பேரோடும் இருக்காளே...!

கலைவாணி, கைகள் இரண்டையும் மேசையில் ஏவிவிட்டாள்; குத்தினாள்; நொந்த உதடுகளுக்கு எதிராய் சொந்தப் பற்களையே ஏவிவிட்டாள். உள்ளே கதவை உடைத்துக்கொண்டு போய், அந்த பம்மாத்துக்காரியிடம் மன்றாடலாமா...அல்லது அவளைத் துண்டாட லாமா...என்பது போல், அந்தக்கதவுப் பக்கம் போனாள். உடனே, யதார்த்தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/270&oldid=635719" இலிருந்து மீள்விக்கப்பட்டது