பக்கம்:பாலைப்புறா.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 271

அவளை அந்த ‘பி.ஏ. நாற்காலிக்கு இழுத்து வந்தது...பின் விளைவுகளை யோசிக்க வைத்தது. வீடற்றுப் போனவள். இவளைப் பகைத்தால், இவளின் பினாமியாக இருக்கக்கூடிய அந்த அசோகன்கூட இடம் கொடுக்கமாட்டான். எவளும், எவனும் எக்கேடும் கெடட்டும்.. எனக்கென்ன... நான் ஒரு சின்னஞ்சிறு குருவி..பனங்காயை சுமக்க முடியாது...

கலைவாணி, லேசாய் நிதானப்பட்டு உட்கார்ந்தபோது, டாக்டர்சுமதியே ரகோத்தமனுடன் வெளியே வந்தாள். அவனுடன் சிரித்துப் பேசிய முகத்தை சிறிது கடுமையாக்கியபடியே, கலைவாணியிடம் கேட்டாள்.

‘இன்றைக்கு...நடக்கப் போகுதே..எய்ட்ஸ் விழிப்புணர்வு இயக்கம்... ஆடியன்ஸ், பேச்சாளர்கள் வந்துட்டாங்களான்னு செக்கப் செய்துட்டியா...?”

‘இன்னும் இல்ல...’

‘ஒனக்கு கொஞ்சமாவது அறிவிருக்குதா.உள்ளுர்ல நடக்கிற பங்ஷன்களை, முன் கூட்டியே செக்கப் செய்யனும்...என்கிறது தெரியாதா..? இதில வேற நான் துவக்கி வைக்கறேன்... நாளைக்கு நான் கூப்பிட்டாலும், நீ வரப்படாது.அப்புறம், மிஸ்டர்ரகோத்தமன்...முடியுமானால், காண்டோம் யூஸ் பண்ணுங்க. ஒங்க ஒய்ப்பையும்ஆறு மாசத்துக்கு ஒரு தடவை... இங்கே கூட்டிவந்து செக்கப் செய்துக்கணும்..இந்தா ஒன்னைத்தான்... நான் கீழே நிற்கேன்..அந்த பிளாஸ்டிக் பையைத் தூக்கிட்டு வா.எய்ட்ஸ் கேம்புக்கு போகணும்...ஏன் சரின்னு கூட பதில் சொல்லமாட்டங்கறே?”

இதற்கும், கலைவாணி பதில் பேசவில்லை. அதை, பய பக்தியாக எடுத்துக் கொண்டு, சுமதி நடந்தபோது, ரகோத்தமன் ஒரு கவரில் டாக்டர் சுமதியின் உதவியாளர் என்று எழுதி அவளுக்கும் ஒரு அழைப்பிதழை மேசையில் போட்டுவிட்டு, முன்னால் போனசுமதியை நோக்கி ஓடினான்.

கலைவாணி,..மேஜையில் உள்ள டெலிபோனை திரிசூலம் போல் எடுத்தாள். அழைப்பிதழைப் புரட்டினாள். மணப் பெண்ணின் தந்தையின் பெயரும், முகவரியும் தெளிவாகவே போடப்பட்டிருந்தன. அவள் எண்களை சுழற்றினாள். ‘போனோ கிராம் என்று கேட்டாள். பிறகு இவளே ஆங்கிலத்தில் படுவேகமாய்ச் சொன்னாள். அப்படியும் திருப்தியுறாமல் கோவைக்கு, எஸ்.டி.டி. போட்டாள். “மிஸ்டர் பத்மநாபன் இருக்காரா..? நீங்க தானா...ஒங்களோட எதிர்கால மருமகன் ரகோத்தமன்...எய்ட்ஸ் கிருமிகள் உள்ளவர் சார். கல்யாணம், கருமாந்திரத்தில முடியும் சார்...நான் சொல்வதில் சந்தேகம் வந்தால், நம்பிக்கையான டாக்டர்கிட்டே அந்தப் பையனை டெஸ்ட் செய்து பாருங்க..என் பேரா. கோணச்சத்திரத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/271&oldid=635720" இலிருந்து மீள்விக்கப்பட்டது