பக்கம்:பாலைப்புறா.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 பாலைப்புறா

இருக்கிற கலைவாணி.டாக்டர்சுமதியோடதாற்காலிக உதவியாளர்.”

கலைவாணிக்கு, ஒரு அசுரதிருப்தி...அழகான இளைஞனாய் அவதாரம் எடுத்த ஒரு மகிஷாசுரனை வதைக்காமலே முடக்கிப்போட்ட நிறைவு. அவளுக்கே இப்போது தன்னை நினைக்க ஒரு ஆச்சர்யம்... ஒரு ஆனந்தம்...எனக்கும் இவ்வளவு தைரியமா? என்னாலும் இப்படி (D... ?'’

அப்போதுதான் அலுவலகம் வந்த மீசைக்கார இளைஞன், கலைவாணியிடம் அடித்துப் பிடித்து ஓடிவந்தான். ‘அம்மா...கத்துறாங்க... பிளாஸ்டிக் கூடையைதுக்கிட்டு உடனே போகணுமாம்...’

கலைவாணி சிரித்தாள்...அலட்சியமாய் சிரித்தாள்.ஆனாலும் உள்ளே போய்,அந்த பிளாஸ்டிக் கூடையைத்துக்கினாள்...அதற்குள்மினரல் வாட்டர் பாட்டில் மருந்து மாத்திரைகள், ஒரு சின்னத் துண்டு...பொன்னாடையோ சந்தனை மாலையோ போடப்படுவதை உள்வாங்கும் அளவுக்கான பெரிய கூடை தான்...

கலைவாணி, அதைத்துக்கிக்கொண்டு, கீழே போனாள், சுமதியை. கீழ் நோக்கிப் பார்த்தபடியே போனாள். உள்ளே இருப்பவர்களை அடையாளம் காட்டாத தங்கமுலாம் விளிம்பு கொண்டு பெரிய கார்... பக்கத்தில் நின்ற ரகோத்தமனோடு சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்ட நின்ற டாக்டர் சுமதி, கலைவாணியை பல்லைக் கடித்துப்பார்த்தாள்..என்ன வழக்கம். கார்க் கதவைத் திறந்துவிடாத பழக்கம்...

‘'நான் வேணுமுன்னால், ஒனக்கு காரைத் திறந்து விடட்டுமா.. கவைாணி?

கலைவாணி, அப்படியே நின்றபோது, டிரைவர் ஓடிவந்து கதவைத் திறந்தார். சுமதி, ரகோத்தமன் போட்ட கும்பிடை அங்கீகரித்தபடியே, பின்னிருக்கையில், ஏறினாள். கலைவாணி, முன்னிருக்கையில், ஏறினாள். நேற்றுப் பின்னால் ஏறப்போனபோது, முதலாளியம்மாள் முன்பக்கத்து இருக்கையைக் காட்டினாள்.

அந்தக்கார், சாலை முழுவதையும் அடைத்துக்கொண்டு ஒடியது. கலைவாணி அவளைப் போலவே காற்றில் துடித்த எய்ட்ஸ் விழிப்புணர்வு அழைப்பிதழை தூக்கிப் பிடித்துப் பார்த்தாள்; அரைநாள் கூத்து..நேற்று எய்ட்ஸ் விழிப்புணர்வு பட்டறை, இன்றைக்கு பயிற்சி முகாம்...அதே ஆரம்ப சுகாதார நிலையம். அதே பேச்சாளர்கள்..அநேகமாய் அதே கூட்டம். அழைப்பிதழில்தான் வித்தியாசம்... நேற்று நடந்தது தமிழக அரசின் மக்கள் தொடர்பு துறையின் ஏற்பாடு...இன்று நடப்பது இந்திய அரசின் களவிளம்பரத் துறையின் கூப்பாடு... அதே சாமியானா பந்தல்...பேனர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/272&oldid=635721" இலிருந்து மீள்விக்கப்பட்டது