பக்கம்:பாலைப்புறா.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 273

மட்டும் வித்தியாசம்... நேற்று மூன்று வேளை சாப்பாடு... இன்றைககு ஒரு வேளை சாப்பாடு., தலைமை வகிப்பவர் பெயரில் மட்டும் மாற்றம். டாக்டர் அசோகன், நேற்றுவரவில்லை.நேற்றைய பட்டறையை துவக்கி வைத்த டாக்டர் முஸ்தபா, இன்று முக்கிய உரை ஆற்றுகிறார். நேற்று முக்கிய உரை ஆற்றிய டாக்டர் சுமதி, இன்று துவக்கி வைக்கிறார்...”

அந்தக்கார், அதே மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்னால் வந்தது. இந்திய அரசின் கள விளம்பரத்துறை மாவட்ட அதிகாரி சந்தானக்குமார், டாக்டர்சுமதியை கைகூப்பிவரவேற்றதுடன், சென்னையில் இருந்து வந்திருக்கும் தனது மேல் அதிகாரியான இணை இயக்குநரிடம் அவளை அறிமுகம் செய்தார். உடனே அவள் ஒங்க ஆபீசர் பிரமாதமாய் வேலைபார்த்தார்,என்று அழுத்தம் திருத்தமாய்ச்சொன்னாள். உடனே அந்த இணை"ஐ நோ...’ என்றது. அவள், தனது ஜூனியர் சகாவுக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.

எல்லோரும், மேடையில் ஏறினார்கள். டாக்டர் அசோகன், தன்னந்தனியாக கூட்டத்தை நடத்தப் போவது போல கால் மேல்கால் போட்டு, முன் கூட்டியே உட்கார்ந்து இருந்தான். டாக்டர் சந்திரா, முன் வரிசையில், நர்சம்மா மாலதியும் அதே வரிசையில்...நாற்காலிகளிலும், பெஞ்சுகளிலும், உட்கார்ந்திருந்த அதே நேற்றையக் கூட்டம் என்ன வேணுமுன்னாலும் பேசுங்கடா... எங்க காது ஒங்களுக்கு இல்லை என்பது மாதிரி, தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தது.

மேடையில் இருந்தபடியே டாக்டர் அசோகன், சந்திராவின் பக்கத்தில் இருந்த கலைவாணியைக் கூப்பிட்டான். அவள் முகத்தை வேறு பக்கமாக திருப்பினாள். இதனால், அசோகனே மேடையில் இருந்து இறங்கி, அவள் பக்கமாகப் போனான். பட்டும் படாமலும் பார்த்தவளிடம் பரவசத்தோடு கேட்டான்.

“என்ன கலைம்மா... வழக்கம் போல்...இந்த ஞாயிற்றுக்கிழமை வர்ல’ ‘சொல்லுங்க டாக்டர்...’ ‘ரொம்ப கட் அன்ட் ரைட்டா இருக்குது...? அப்புறம், இன்னிக்கி நீ பேசினால்...நல்லது; மெட்ராஸ்லே... சேகர் என்கிற இளைஞர் தனக்கு எப்படி ஹெச்.ஐ.வி.வந்ததுன்னு கூட்டம் கூட்டமாய் பேசுறார். இந்த வகையில் நீ ஒரு பாவமும் செய்யாதவள். நீ ஏன் ஒனக்கு எப்படி...இந்த நோய் வந்ததுன்னு பேசப்படாது. ஏன் பதில் பேசமாட்டக்கே...? மெளனம் சம்மதம்; சரிதானே...கலைம்மா...?”

கலைவாணி, அசோகனை ஒரு மாதிரியாகப் பார்த்தாள். அவன் பாம்பா.. இல்லை பழுதா... பேசலாமா... என்பது போல் டாக்டர்சந்தி ராவைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/273&oldid=635722" இலிருந்து மீள்விக்கப்பட்டது