பக்கம்:பாலைப்புறா.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 பாலைப்புறா

பார்த்தாள், அவளேசங்கடமாக நெளிந்தாள்...

அந்தப் பயிற்சிப் பட்டறை, நீராடும் கடலுடுத்துடன் துவங்கியது. டாக்டர்சுமதி, காற்றோடு போராடிப் போராடி குத்து விளக்கை ஏற்றும்போது, வீடியோ கேமிரா வெளிச்சம் போட்டது... பத்திரிகை காமிராக்கள் ஒன்ஸ்மோர் கேட்டன. பட்டறைத் தலைவரான டாக்டர் அசோகன், முன்னுரையை முடிவுரையாய் பேசப்போவதாய்க் கூறிவிட்டான். வரவேற்புரை நல்கிய இணை இயக்குநர், நெல்லையில் இருந்து வேனில் கூட்டி வந்த செய்தியாளர்களையும், அந்த ரெடிமேட் கூட்டத்தையும் பார்த்தபடியே, இறுதியாக ஒன்று...என்ற பல இறுதி ஒன்றுகளை சேர்த்து. அவற்றின் எண்ணிக்கையை பத்துக்கு மேல் கொண்டு போய்விட்டார். அப்புறம் டாக்டர் சுமதியின் துவக்க உரை..இடை இடையே...'செட்டப் செய்த ஜோக்குகள். சின்னச் சின்னக்கதைகள்...ஆனாலும் கூட்டம் சிரிக்க வில்லை... கைதட்ட வில்லை.அத்தனையும் அரைத்த மாவு. அதுவும் புரிந்த மாவு, புளித்தமாவு; என்றாலும், இந்த நோயால் பெண்கள் எப்படி பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்று சுமதி சொன்ன போதும்...அப்பாவிக் குழந்தைகள் எப்படி பலியாகிறார்கள் என்று நேற்று சொன்னதையே இன்று விளக்கியபோதும், கூட்டம் அமைதிப்பட்டுக் கேட்டது. ஆனாலும், அவள் எல்லைதாண்டி என்னவெல்லாமோ பேசினாள்.

அடிக்கடி டாக்டர் சுமதியையும், கைக்கடிகாரத்தையம் மாறி மாறிப் பார்த்த அசோகன், அவள் பேசி முடிந்ததும், முக்கிய உரை ஆற்றுவதற்காய் எழுந்த டாக்டர் முஸ்தாபாவைக் கையமர்த்திவிட்டு, ‘எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட அப்பாவிப்பெண் கலைவாணி, இப்போது பேசுவார். என்றான்...

கூட்டம் அரை நிமிடம் வரை. கசா முசாவாய் பேசியது..பிறகு பேரமைதி. எல்லோர் கண்களிலும் ஒரு பரபரப்பு; குனிந்து, ரகசியம் போல் பேசிக் கொண்டிருந்தவர்களின் தலைகள் நிமிர்ந்தன. பின் வரிசைக் காரர்களில், சிலர், எழுந்தே விட்டார்கள். டாக்டர் சுமதி, பேச வேண்டாம் என்று கலைவாணியிடம் சமிக்ஞை செய்யப் போனாள். அவள் பார்த்தால் தானே...

கலைவாணி, இருக்கையை விட்டு எழுந்தாள். மேடைப் படிக்கட்டை இரண்டு படிகளாகத்தாவினாள். போடியத்தில் பொருத்தப்பட்டமைக் முன் னால் நின்றாள். ப்ெரும்பான்மையாய் பெண்களைக் கொண்ட அந்தக் கூட் டத்தை நேருக்கு நேராய்ப் பார்த்து, கைகூப்பி வணங்கினான்... தலை வரையோ, பிரமுகர்களையோ அவர்களே போட்டு விளிக்காமல் பேசினாள்.

“ஆமாம்...நண்பர்களே! டாக்டர். அசோகன் சொன்னது போல், நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/274&oldid=635723" இலிருந்து மீள்விக்கப்பட்டது